இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்.. எப்போது தெரியுமா? விறுவிறுப்பாக நடக்கும் வேலை!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில், பிப்ரவரி மாதம், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது திருமண தேதி குறிக்கப்பட்டு மும்முரமாக திருமண வேலையில் ஈடுபட்டு இருக்கிறார் ஷங்கர்.

பிரமாண்ட இயக்குநர் என அனைவராலும் கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவரது இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமாவின் மீது இருந்த ஆசையால் விருமன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நடித்தது மட்டுமில்லாமல், மதுரை வீரன் அழகுல என பாட்டுப்பாடி பாடகியாகியாகவும் மாறிய இவர், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Do you know when Shankar s daughter Aishwarya will get married

இயக்குநர் ஷங்கர்: ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆனால், திருமணமான சில மாதத்திலேயே ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ரோஹித்துடன் சேர்ந்து வாழவில்லை.

இரண்டாம் திருமணம்: மகளின் வாழ்க்கை இப்படியானதை நினைத்து வருத்தப்பட்ட ஷங்கர், ரோகித்திடம் இருந்து தனது மகளுக்கு முறையாக விவாகரத்தை பெற்றார். இதையடுத்து, தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்த ஷங்கர், தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் மருமகனாக்கி உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு உறுதி செய்த பிறகே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

திருமண தேதி : இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் திருமணத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மகளின் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்துவிட்டதால், திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது மனைவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்தார். மேலும், தனது முதல் படமான ஜெட்டில்மேன் பட நாயகி மதுபாலாவை மும்பையில் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ஷங்கர், தருண் கார்த்திகேயனின் திருமணம் ஏப்ரல் 15ந் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து அலுத்துப்போய் விட்டார்கள். ராம் சரணின் பிறந்தநாளான மார்ச் 27ந் தேதி கேம் சேஞ்சர் முதல் பாடல் வெளியானது ரசிகர்களை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ராம் சரண் ரசிகர்களின் காத்திருப்புக்கு சரியான ட்ரீட்டாக ஜரகண்டி பாடல் அமைந்துள்ளது. ஷங்கர் - பிரபுதேவா - ராம் சரண் என்ற இந்தக் கூட்டணி பாடல் காட்சியில் திரையில் மாயத்தை செய்துள்ளது. ரசிகர்கள் இந்த பாடலை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X