ராயல்டி விவகாரம்.. பின்னணி இதுதான்.. இளையராஜா தனியாக போராடுகிறார்!

சென்னை: தமிழ் சினிமாவில் எழுபதுகளில் தொடங்கி பல தலைமுறைகள் கடந்து அனைவராலும் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் முடிசூடா மன்னனாக இருக்கிறார் இசைஞானி இளையராஜா. சமூகவலைதளத்தில் அண்மைக்காலமாக இவரின் பெயர் ராயல்டி விவகாரம் தொடர்பாக பேசுபொருளாகி உள்ளது. இந்த காப்பி ரைட் விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல்டி விவகாரத்தை பேசும் போது, இளையராஜா, எஸ்பிபி நட்பை பற்றி பேசாமல் இருக்க முடியாது. இருவரின் நட்பும் திரைத்துறை அறிமுகத்திற்கு முன்பிருந்தே தொடங்கியது. ஆரம்ப காலத்தில் இளையராஜா வைத்திருந்த பேண்ட் மூலம் நடக்கும் லைவ் ஷோக்களில் எஸ்.பி.பி பாடுவார். பின், இளையராஜா படங்களில் இசையமைக்க தொடங்கியதும், அவரின் இசையில் எஸ்.பி.பி பாடவில்லை. பின் தொடங்கிய இந்த சகாப்த கூட்டணி இசைத்துறையையே கட்டிப்போடடு, இவர்கள் கூட்டணியில் மட்டும் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பல மொழியில் வெளிவந்தன.

Do you know where the Ilayaraja royalty problem started

முதல் நோட்டீஸ்: 2017ம் ஆண்டு எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இசைகச்சேரி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். எஸ்பிபி பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் பாடியதால், இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் எவர்கிரின் பாடல்கள் இடம் பெற்றன. இந்த நேரத்தில் தான் இளையராஜா, எஸ்பிபிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், என் அனுமதி இல்லாமல் பாடலை பாடக்கூடாது, பாடலை பாட வேண்டும் என்றால் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று இளையராஜா கூறியது. மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பியது.

கடும் விமர்சனம்: அனைவரும் இளையராஜாவை திட்டி தீர்த்து, பாடலுக்கு அவர் மட்டும் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்றும், அவர் இளையராஜ இல்லை, ஆணவ ராஜா, பணத்தின் மீது அவருக்கு ஆசை வந்துவிட்டது என்று அவர் மீது வன்மத்தை கொட்டிதீர்த்தனர். இதனால், இளையராஜா எஸ்பிபி நட்பில் விரிசல் ஏற்பாட்டு இருவரும் பிரிந்தனர். பின் காலப்போக்கில் அது சரியானது தனிக்கதை.

கூலி டிஸ்கோ: ஆனால், தற்போது என்ன பிரச்சனை என்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி' வெளியானது அதில், 83ம் ஆண்டு ரஜினி நடித்த 'தங்கமகன்' படத்தில் இளையராஜா இசையமைத்த 'வாவா பக்கம் வா' பாடலின் 'டிஸ்கோ' இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த இசையை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சன் பிக்சர்க்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ்: அதே போல, மலையாளத்திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், கண்மணி அன்போடு காதல் என்ற அனுமதி இன்றி பயன்படுத்தியதாக படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு சரியான பதிலடி கொடுத்த, படக்குழு, உரிமையை வாங்கிய பிறகுதான் படத்தில் பயன்படுத்தியதாக விளக்கம் அளித்துள்ளது.

பின்னணி இதுதான்: இப்படி இந்த மூன்று பிரச்சனை தான் இளையராஜா பெயர் அடிக்கடி சோஷியல் மீடியாவில் அடிபட முக்கிய காரணம். இந்த ராயல்டி பிரச்சனை இளையராஜாவிற்கு மட்டும் ஏற்பட காரணம் என்ன வென்றால், இந்தியாவில் இசையமைப்பாளர்களுக்கு என்று ஒரு அசோசியன் உள்ளது. அந்த அமைப்பு இசையமைப்பாளர்களுக்காக சண்டை போடும், அந்த அமைப்பு சரியில்லை என்று, இளையராஜா அந்த அமைப்பில் இருந்து வெளியேறி, எனக்காக நானே போராடுகிறேன் என்று வெளியேவந்து விட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு: இதன் பிறகு 2012ம் ஆண்டு காபி ரைட் சட்டத்தில், பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத, இளையராஜா, ஆடியோ கம்பெனிக்கோ, தயாரிப்பாளருக்கோ உரிமை இல்லை. பாடலை ஒரு படத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கான ரைட்ஸ் என்னிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று இளையராஜா கூறுகிறார் இது குறித்த வழக்கு நீதிமன்றம் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. விரைவில் தீர்ப்பு வந்த பிறகுதான், இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும். இதுவரைக்கும் இளையராஜா பாடலை யார் பயன்படுத்தினாலும், நோட்டீசை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X