யார் இந்த அனன்யா மாரிமுத்து? தேவதாசாக மாறிய இணையவாசிகள்.. கடைசியில் பல்பு!

சென்னை: இந்த காலத்தில் இளசுகளோ, பெருசுகளோ குனிந்த தலையை நிமிர்ந்து கூட பார்க்க நேரம் இல்லாமல், கையில் ஃபோனை வைத்துக்கொண்டு, சோசியல் மீடியாவில் ரீலிஸ், வீடியோவே கெதி என இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் ஆப்பு வைத்து இருக்கிறார் "The Real அனன்யா மாரிமுத்து". பலருக்கு ஷாக் கொடுத்த இந்த அனன்யா மாரிமுத்து யார் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் விதவிதமான ரீல்ஸ்களை வெளியிட்டு ஒன்று புள்ளி மூன்று மில்லியன் பாலோவர்களை வைத்திருக்கிறார் இந்த அனன்யா மாரிமுத்து. இவர், வெளியிட்டது என்னமோ 26 வீடியோ தான். ஆனால், ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று இணையத்தில் டிரெண்டானது. புடவை, சுடிதார் என விதவிதமான உடையில், அந்த உடைக்கு ஏற்றபடி லூஸ் ஹேரில் வீடியோவை வெளியிட்டு இணைவாசிகளை தன் பக்கம் இழுத்து இருக்கிறார் இந்த அனன்யா மாரிமுத்து.

Actress Instagram

யார் இந்த அனன்யா மாரிமுத்து: இவரின் அழகில் மயங்கிய சில பாலோவர்கள் காதலிப்பதாக லவ் ப்ரொபோஸ் செய்து காதல் அம்புகளையும், இதயத்தையும் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக சுடிதாரில் கல்லூரி ஐடியுடன் இருக்கும் வீடியோவை பார்த்து மனதை பறிகொடுத்த இளசுகள் பலர், அந்த ரிலீஸுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வந்தனர். மேலும், புடவையில் லேசாக இடைதெரியும் படி அனன்யா மாரிமுத்துவை பார்த்த சிலர், அன்பே உன் அழகு எனக்கு மட்டும் தான் சொந்தம் என்றும், இப்படி உடை போடாதே தங்கம் என்றும் கருத்து ஊசியும் போட தொடங்கிவிட்டனர்.

Actress Instagram

காதல் அம்பு: ஆனால், கடைசியில் இணையவாசிகளுக்கு அனன்யா மாரிமுத்து சரியான பல்ப் கொடுத்து இருக்கிறார். அது இணையவாசிகளில் தலையில் பெரிய இடியாக விழுந்து இருக்கிறது. இது என்னவென்றால், அது உண்மையிலேயே பெண்ணே இல்லை... 'AI' வீடியோவாம். இந்த விஷயம் தெரிந்த பல இளைஞர்களின் இதயம் நொறுங்கி போய் அடக்கடவுளே 'AI' ஆக, காலக்கொடுமைடா சாமி என ஸ்தம்பித்து உள்ளனர். கண்ணால் பார்ப்பதும் பொய்.... தீர விசாரிப்பதே மெய் என்பது இந்த விஷயத்தில் மீண்டும் நிரூபனமாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X