Ayodhya Ram Mandir - ராமர் கோயில் கட்ட நன்கொடை கொடுத்த நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இன்று அதன் திறப்பு விழா படு பிரமாண்டமாக நடந்தது. இந்த சூழலில் அந்தக் கோயில் கட்டுவதற்கு பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் முதல் டோலிவுட் நடிகர்கள்வரை நன்கொடை கொடுத்திருக்கிறார். அப்படி கொடுத்தவர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டுவந்த ராமர் கோயிலின் பணிகள் முடிந்ததை அடுத்து இன்று அந்தக் கோயில் திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. அதனையடுத்து கோயிலும் திறக்கப்பட்டது. இந்தக் கோயில் திறப்பு விழாவுக்கு பாலிவுட், கோலிவுட், டோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அயோத்திக்கு படை எடுத்திருக்கின்றனர். தமிழ் திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர்.

Do you know who are the actors and actresses who donated to build Ayodhya Ram Mandir

பிற பிரபலங்கள்: அதேபோல் பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சன், அனுபம் கெர், கங்கனா ரணாவத், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோரும் தெலுங்கிலிருந்து சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டது தங்களது வாழ்நாள் பாக்கியம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த சூழலில் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த திரையுலக பிரபலங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது.

அக்‌ஷய் குமார்: பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நம்மால் முடிந்த தொகையை கொடுப்போம். அங்கு கோயில் கட்டப்படுவதை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. நாம் நன்கொடை வழங்குவோம். கோயிலுக்காக நான் நன்கொடை அளித்துவிட்டேன். அதேபோல் நீங்களும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

சக்திமான் முகேஷ் கண்ணா: 90ஸ் கிட்ஸ்களால் என்றுமே மறக்க முடியாத சீரியல்தான் சக்திமான். 90களீல் வெளியாகி சக்கைப்போடு போட்டது அந்த சீரியல். அதில் நடித்து பிரபலமானவர் முகேஷ் கண்ணா. அவர் தனது தொகுதி எம்.எல்.ஏவான அதுல் பட்கல்கரிடம் நன்கொடையாக 1லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சில வருடங்களுக்கு முன்பே அளித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாண்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் திகழ்ந்துவரும் அவர் ராமர் கோயில் கட்டுவதற்காக 30 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். அவர் நன்கொடை வழங்கியதை பார்த்த அவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள் 11,000 ரூபாயை ராமர் கோயில் கட்டுவதற்காக அளித்தார்கள். இன்று ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டிருக்கும் அவர், 5 நூற்றாண்டு போராட்டத்துக்கு பிறகு அயோத்திக்கு ராமர் மீண்டும் வந்திருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

மற்ற நடிகர்கள்: அதேபோல் நடிகை ஹேமமாலினி, நடிகர் மனோஜ் ஜோஷி, டிவி நடிகர் குர்மீத் சௌத்ரி, நடிகை ப்ரணிதா, தயாரிப்பாளர் மனீஷ் முந்த்ரா உள்ளிட்டோரும் ராமர் கோயிலுக்காக நன்கொடையாக தங்களால் முடிந்த தொகையை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X