இரண்டு பேருக்குமே 2வது திருமணம்.. நடிகை சம்யுக்தா கணவரின் முதல் மனைவி யார் தெரியுமா?

சென்னை: நடிகை சம்யுக்தா, பிரபல கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், நேற்று இவர்களின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தின் முதல் மனைவி யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாடல் அழகியான சம்யுக்தா, பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின், வாரிசு, காஃபி வித் காதல், துக்ளக் தர்பார், மை டியர் பூதம் போன்ற படங்களில் நடித்து வந்தார் சம்யுக்தா. இவருக்கு ஏற்கனவே கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு மகன் உள்ளார். சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்ட கார்த்திக், திருமணமான கையோடு துபாய் சென்றுவிட்டார். துபாய் சென்ற கார்த்திக் அங்கு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து இருக்கிறார். இதை கேள்விப்பட்ட சம்யுக்தா மனம் மிகவும் உடைந்து போய் அவரை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் தனியே வாழ்ந்து வந்தார்.

Samyuktha Aniruddha Srikkanth marriage
Photo Credit:

நடிகை சம்யுக்தா: தற்போது, சம்யுக்தா, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். அனிருதா ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் ஆவார். இவர், 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். 2011ஆம் ஆண்டு வெளியான 'மார்க்கண்டேயன்' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர், மாடலிங் துறையில் இருந்த ஆர்த்தி வெங்கடேஷை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆர்த்தி வெங்கடேஷ் யார்?: ஆர்த்தி வெங்கடேஷ், பல சர்வதேச பிராண்டுகளுக்கு மாடலாக இருந்துள்ளார். மேலும் இவர், 2017ஆம் ஆண்டு வெளியான 'ரம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹிருத்திக் மாத்ரு, விவேக், மிர்சி சிவா ஆகியோருடன் நடித்துள்ளார். 'ரம்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், ஆர்த்தியின் நடிப்பு கவனம் பெற்றது. இதையடுத்து, 2018ஆம் ஆண்டு அனிருதாவுக்கும் ஆர்த்திக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவரும் எந்த காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பது பொது வெளியில் அதிகம் பேசப்படவில்லை. விவாகரத்துக்குப் பிறகு ஆர்த்தி வெங்கடேஷ் தனது மாடலிங் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். மாடலாகவும், நடிகையாகவும் தனக்கென ஒரு பாதையை அவர் வகுத்துக்கொண்டு அதில் பயணித்துக்கொண்டு இருக்கிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X