42 வயதில் விவாகரத்து.. மூன்றாவது கணவரை பிரிந்த நடிகை.. 2வது கணவரின் 2வது மனைவி யார் தெரியுமா?

சென்னை: சோசியல் மீடியாவில் நேற்று மிகவும் பேசப்படும் நடிகையாக இருந்தவர் மீரா வாசுதேவன். 42 வயதான இவர், தனது மூன்றாவது கணவரை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஏற்கனவே இரண்டு திருமணங்களை செய்து அதில் தோல்வி அடைந்து, மூன்றாவது திருமணம் செய்த இவர், மூன்றாவது கணவரையும் பிரிவு முடிவை எடுத்திருக்கிறார். இந்த நடிகையின் இரண்டாவது முன்னாள் கணவர் யார்? அவர் யாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பதை இந்த செய்திகள் நாம் பார்க்கலாம்.

நடிகை மீரா வாசுதேவன், சமுத்திரக்கனி இயக்கிய உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், குமரி பெண்ணின் உள்ளத்திலேயே உள்ளிட்ட தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் 2005ஆம் ஆண்டு விஷால் அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2008ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின், 2012 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கேனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையிலும் சரியில்லாததால், அவரை விவாகரத்து செய்தார்.

3வது கணவரை பிரிந்தார்: அதன் பின் 7 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வந்த நடிகை மீரா வாசுதேவன், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான விபினை மூன்றாவதாக திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இருவருக்கும் திருமணமாகி ஓராண்டுக்குள் தற்போது விபினை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் மீரா வாசுதேவன் அறிவித்துவிட்டு, திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்துள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Meera Vasudevan john kokken pooja ramachandran
Photo Credit:

2வது கணவர்: இந்நிலையில் நடிகை மீரா வாசுதேவனின் இரண்டாவது கணவர் பிரபல வில்லன் நடிகர் ஜான் கொக்கைன். இவர், வீரம், பாகுபலி, கே.ஜி.எஃப் சாப்டர்1, சார்பட்டா பரம்பரை, துணிவு போன்ற பல படங்களில் நடித்துள்ளார் சார்பட்டா பரம்பரையை திரைப்படத்தில் வேம்புலி கதா பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கிய வில்லனாக ஜான் கொக்கைன் நடித்திருந்தார். இவர், பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்: நடிகை பூஜா ராமச்சந்திரன், தொகுப்பாளினியாக பணியாற்றிய போது, தன்னுடன் பணிப்புரிந்த விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 2017 ஆம் ஆண்டு பிரிந்து அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இதைத்தொடர்ந்து, கேரளாவை சேர்ந்த ஜான் கொக்கைன்னுடன் நட்பு ஏற்பட்டு, பின் அது காதலாக மாறியதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதிகளுக்கு 2023 ஆம் ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பூஜா அவ்வப்போது தனது கணவன், குழந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். நடிகை பூஜை ராமச்சந்திரன் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X