தெலுங்கில் ரீமேக் ஆகும் கர்ணன்...தனுஷுக்கு பதில் யாருன்னு தெரியுமா?

ஐதராபாத் : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பிளாக்பஸ்டர் படமான அசுரன் படம் தெலுங்கில் நரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்த படம் 2021 ம் ஆண்டு மே 14 ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended Video

OTT release Movies? Netrikann, Cobra, Jagame Thanthiram lined Up | Amazon, Hotstar

தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து, சமீபத்தில் வெளிவந்த படம் கர்ணன். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். பாக்ஸ்ஆபீசில் நல்ல வசூலை பெற்றாலும் பாராட்டுக்கள், விமர்சனங்கள் ஆகிய இரண்டையும் கர்ணன் படம் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்த இந்த படத்தில் ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா, நட்டி நடராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தெலுங்கிற்கு செல்லும் கர்ணன்

தெலுங்கிற்கு செல்லும் கர்ணன்

தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமத்தை, டோலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான பெல்லம்கொண்டா சுரேஷ் பெற்றுள்ளார். ரீமேக் செய்யப்படும் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்த ஹீரோ கேரக்டரில், தனது மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாசை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். டைரக்டர் உள்ளிட்ட மற்ற படக்குழுவினரின் விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

 தேசிய விருது பெற்ற அசுரன்

தேசிய விருது பெற்ற அசுரன்

சமீபத்தில் தான் தனுஷ் நடித்த அசுரன் படம், சிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்றது. சிறந்த படம், சிறந்த நடிகர் போன்ற பிரிவுகளில் அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்ததால் ரீமேக் ஆகும் நரப்பா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் ரீமேக் படங்களில் சாய் ஸ்ரீநிவாஸ்

தமிழ் ரீமேக் படங்களில் சாய் ஸ்ரீநிவாஸ்

இந்நிலையில் தனுஷின் கர்ணன் படமும் ரீமேக் செய்யப்பட உள்ளது. அத்துடன் பொல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் சமீபத்தில், தமிழ் படமான ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ராட்சசுடு படத்தில் நடித்தார். இந்த படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தமிழில் விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த ராட்சசன் படத்தை ராம்குமார் இயக்கி இருந்தார்.

தமிழ் படங்களுக்கு மவுசு

தமிழ் படங்களுக்கு மவுசு

தமிழ் படங்கள் பலரும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அப்படி ரீமேக் செய்யப்படும் படங்கள் பலரும் மெகாஹிட் படங்களாக, வசூலை குவித்து வருகின்றன. அதிலும் தமிழில் ஹிட்டாகும் பல படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் ஹிட் ஆகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X