நடிகர் தனுஷ் இயக்கும் 3வது படத்தின் ஹீரோ யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்க இருக்கும் மூன்றாவது படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள ஹீரோயின் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலக அளவில் ரசிகர்களை கொண்ட நடிகராக இருக்கிறார் தனுஷ். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.

Do you know who is the hero of Dhanushs Nilavukku En Mel Ennadi Kobam

பீரியட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தயாராகி வரும் கேப்டன் மில்லர் 2024 பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில், கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், நாசர் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் தனுஷ்: அப்பா கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன் போல, தனுஷூம் ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி என்ற படத்தை இயக்கினார். தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து த்ரி படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன. த்ரி படத்தை மனைவியுடன் சேர்ந்து இயக்கி இருந்தாலும் பவர் பாண்டி படம் தான் இவர் இயக்கிய முதல் படமாகும்.

தனுஷின் 50வது படம்: பவர் பாண்டி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல ஆண்டுகள் படத்தை இயக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தனுஷ், தனது 50வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பின்னர் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து பேன் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

நிலவிற்கு என் மேல் என்னடி கோபம்: இந்த படத்தைத் தொடர்ந்து தனது 3வது படம் பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. காதலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு நிலவிற்கு என் மேல் என்னடி கோபம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு லியோ பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவும், தாய் விஜயலட்சுமியும் இணைந்து வண்டர்பார் நிறுவத்தின் சார்பில் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், தனுஷும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தனது மூன்றாவது படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். பீச் பேக்ரவுண்டில் சேர் இருக்க, அதில் இரண்டு பிறை நிலா "D" என்ற ஆங்கில எழுத்துக்கு பதிலாகவும் இருக்க, #DD3 என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X