ரஜினி 169வது படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் யார் தெரியுமா!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை நெல்சன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது
கோலமாவு கோகிலா, டாக்டர் என முதல் இரண்டு படங்களையும் ஹிட் படங்களாக கொடுத்த நெல்சன் இப்பொழுது பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்
இந்த நிலையில் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இணையும் 169 படத்தில் கதாநாயகி யாராக இருக்கும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

அதே ஸ்டைல் மாஸ்
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் கிராமத்து இளைஞனாக நடித்திருப்பார். இத்தனை வருடங்கள் திரையுலகில் ஹீரோவாக வலம் வந்தாலும் இன்றும் அதே துடிப்புடன் அண்ணாத்த படத்தில் குறும்புத்தனமான நடிப்புடன் நடித்திருந்தது அனைவரையும் கவர்ந்திருந்தது அதே ஸ்டைல் மாஸ் டான்ஸ் என பட்டையை கிளப்பியிருப்பார் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார் மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றி பெற்றது இளைஞர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது

ரஜினி 169
அண்ணாத்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த படம் சிறுத்தை சிவாவுடன் தான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரஜினி 169 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் இறுதி கட்டத்தில்
ரஜினி 169 அறிவிப்பு சமீபத்தில் வெளியானது அதில் அனிருத், ரஜினிகாந்த்,நெல்சன் என மூவரும் கோட் சூட் அணிந்து கொண்டு செம ஸ்டைலிஷாக இருந்தனர். கோலமாவு கோகிலா,டாக்டர் உள்ளிட்ட படங்களால் இப்போது உச்சத்தை தொட்டு இருக்கும் இயக்குனர் நெல்சன் அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடிக்கும் பீஸ்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். பீஸ்ட் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ரஜினி 169வது படத்தில் கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற மிகப்பெரிய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பார்
இந்திய அளவில் பிரபலமாக உள்ள ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் படத்திற்கு ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டதால் தயாரிப்பு நிறுவனம் யோசிப்பதாக கூறப்படுகிறது. எனவே சமந்தா, நயன்தாரா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் இதில் அடிபடுகிறது . விரைவில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற தகவல் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











