தந்தை மகன் மோதல்.. தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை: தளபதி 68 திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில், இந்த படமும் வாரிசு படம் போல குடும்பக்கதை தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் இந்த மாதம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

Do you know who is the heroine of Vijay starrer Thalapathy 68?

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தளபதி 68: இந்நிலையில் தளபதி 68 திரைப்படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தளபதி 68 திரைப்படத்தின் பூஜை மிகவும் சிறப்பாக இன்று காலை நடந்து முடிந்துவிட்டது. இந்த பூஜையில் விஜய், பிரசாத், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீண்டும் ஒரு குடும்ப கதை: இந்த படமும் வாரிசு படம் போல குடும்ப பின்னணி கொண்ட கதை தான் என்பதால், பல நட்சத்திரங்கள் இப்படத்தில் கமிட்டாகி உள்ளனர். இப்போது தான் வாரிசு என்கிற ஒரு குடும்ப கதையில் நடித்த அவர் மீண்டும் ஒரு குடும்ப கதையில் நடிக்கிறார். இந்த படத்திலும் வாரிசு படம் போல அப்பா மகன் மோதல் இருக்கிறது.

Do you know who is the heroine of Vijay starrer Thalapathy 68?

அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு சினேகா ஜோடியாகவும், மகனாக நடிக்கும் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் மாடலாக நடித்தவர். நாளை முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

25 இளைஞனாக: இப்படத்தில், 25 வயது இளைஞனாக விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜய்யின் ஸ்டண்ட் மற்றும் நடனக் காட்சிகள் படமாக்க இருப்பதாகவும், இதற்காக உலக அளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் பயன்படுத்த இருப்பதாகவும், அதிரடி ஸ்டாண்ட் காட்சிகளை 20 கேமராக்கள் கொண்டு படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X