பொய்கால் குதிரையில் பிரபுதேவாவுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியும ா? நடிப்புல பின்னி இருக்காரே!

சென்னை: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், வரலட்சுமி, ஜெகன், ரைசா வில்சன், ஜான் கொக்கேன், போன்ற பலரும் நடித்திருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை.

சந்தோஷ் பி ஜெயக்குமார் எழுதி,இயக்கிய இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் டி இமான்.

பிரபுதேவா இந்த படத்தில் ஒரு கால் இல்லாதவராக நடித்துள்ளார். குழந்தைகளுக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் பிரபுதேவா.

குட் டச், பேட் டச்

குட் டச், பேட் டச்

சந்தோஷ் பி ஜெயக்குமார் எழுதி, இயக்கிய திரைப்படம் பொய்க்கால் குதிரை. பிரபுதேவா இதில் ஒரு கால் இல்லாதவராக நடித்துள்ளார். பிரபுதேவா உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், வரலட்சுமி போன்ற பலரும் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் இந்த திரைப்படம் பெரியவர்களை மட்டும் இல்லாமல் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு குட் டச், பேட் டச் அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எந்த ஒரு சூழ்நிலைகளையும் பெற்றோர்களிடத்தில் பகிர வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள், சில சமயங்களில் குழந்தைகள் உண்மையை கூறினால் கூட அமைதியாக இரு என்று கூறி விடுகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதியை கூட சிலர் கேட்காமல் ஒதுங்கிவிடும் சூழ்நிலைகளும் இருக்கின்றது.

ஒற்றை காலில் பிரபு தேவா

ஒற்றை காலில் பிரபு தேவா

குழந்தை கடத்தல் மையமாக வைத்து ஒற்றை காலில் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார் பிரபுதேவா. இதுவரை அடல்ட் படமாக இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், இந்த படத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்தை கூறியுள்ளார். குழந்தையின் படிப்புக்காக பணம் சேர்த்து வைக்கும் பெண் பிள்ளைக்கு அப்பாவான பிரபுதேவா, அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தனது படிப்பை விட அப்பாவின் கால் தான் முக்கியம் என்று நினைக்கும் குழந்தை சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வைத்து செயற்கைக் கால் பொருத்தும் படி கூறுகிறார். இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் கதையில் குழந்தை காணாமல் போக, எவ்வாறு தனது குழந்தையை கண்டுபிடிக்கிறார் அதற்காக என்னென்ன பிரச்சினைகளை சமாளிக்கிறார் என்பதே பொய்க்கால் குதிரையின் கதை.

பலரை கவர்ந்த ஆழியாவின் நடிப்பு

பலரை கவர்ந்த ஆழியாவின் நடிப்பு

இந்த படத்தில் பிரபுதேவாவின் மகளாக நடித்திருக்கும் குட்டி குழந்தை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளார். பிரபல ரவுடி பேபி என்னும் youtube சேனலில் பிரபலமான ஆழியா நடிப்பில் மிரள வைக்கிறார். youtube சேனலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவரது நடிப்புக்கும், கான்செப்ட் வீடியோவுக்கும் பல ரசிகர்கள் இருந்தனர். தற்போது பிரபுதேவாவுடன் இந்த படத்தில் நடித்திருக்கும் ஆழியா கதைக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

பிடித்த நடிப்பு

பிடித்த நடிப்பு

ஏற்கனவே பிரபுதேவா நடித்து வெளியான மை டியர் பூதம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திருநாவுக்கரசின் தோழியாக நடித்து அசத்தினார். மை டியர் பூதம் படத்தில் இவரது நடிப்பு பிரபுதேவாவுக்கு பிடித்துப் போக, இந்த படத்தில் தனது மகளாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்ததாக ஆழியா கூறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருக்கும் இந்த ஆழியாவிற்கு குழந்தைகள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X