ரஞ்சித்தின் இரண்டாவது மனைவி யார் தெரியுமா? இப்போது யாருடன் சேர்ந்து வாழ்கிறார்!

சென்னை: தமிழ் திரையுலகில் 90களில் பிரபலமாக இருந்த நடிகர் ரஞ்சித் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் ஆ.கே.செல்வமணி தயாரித்த பொன் விலங்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பின் சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சேரனின் பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்

Do you know who is the second wife of actor Ranjith?

நடிகர் ரஞ்சித்: மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ள இவர்,நட்புக்காக, தர்மா படங்களில் வில்லனாகவும் நடித்து முத்திரையை பதித்தார். நேசம் புதிது படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பிரியா ராமனை காதலித்த அவர், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

வள்ளி படத்தில்: பிரியா ராமன், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான வள்ளி திரைப்படத்தில் வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின், பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்த அவருக்கு, ஒரு கட்டத்தில் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர்,மாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.

விவாகரத்து செய்தார்: திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்ட பிரியா ராமன், கணவர் ரஞ்சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2014 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களின் விவாகரத்துக்கு நடிகர் ரஞ்சித்திற்கு நடிகை ராகசுதாவுடன் இருந்த நெருக்கமே காரணம் என் சொல்லப்பட்டது.

இரண்டாவது மனைவி: அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், பிரியா ராமனை விவாகரத்து செய்த சில மாதங்களிலேயே ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார். ராகசுதா நடிகை கே ஆர் விஜயாவின் சகோதரியின் மகள் ஆவார். ஆனால், இந்த திருமணமும் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இதையடுத்து ரஞ்சித் இரண்டாவது மனைவி ராகசுதாவை விவாகரத்து செய்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.

மீண்டும் இணைந்தனர்: இந்நிலையில், முதல் மனைவியுடன் நட்பில் இருந்த ரஞ்சித் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது திருமண நாளில் மீண்டும் சேர்ந்து புதுவாழ்க்கையை தொடங்கினார்கள். 2018 ஆம் ஆண்டு முதல், தனது மனைவி பிரியா ராமனுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரஞ்சித். என்னைக்கு இருந்தாலும் முதல் காதல் மனதை விட்டு விலகாது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X