சூர்யா 44 படத்தின் வில்லன் இவரா? செட்டாகுமா? படக்குழு கொடுத்த அப்டேட்!

சென்னை: சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 44வது திரைப்படத்தினை ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற வெற்றப்படத்தை கொடுத்த சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் ஹாலிவுட் கலைஞர்கள் படத்திற்கு பணியாற்றி வருகிறார்கள். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

Suriya 44 Kanguva Karthik Subbaraj

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: நடிகர் சூர்யா, கடைசியாக கதாநாயகனாக நடித்திடிருந்த படம், எதற்கும் துணிந்தவன். இந்த படம், 2021ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெற்றிப்படமாக அமைந்தாலும், விமர்சன ரீதியாக இப்படம் தோல்விப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதே போல, மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கட்டரி படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இவர் நாயகனாக நடித்த படமும் வெளியாகவில்லை. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

முக்கிய அறிவிப்பு: தற்போது சூர்யா நடிக்க உள்ள சூர்யா 44 படத்தை, சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Suriya 44 Kanguva Karthik Subbaraj

வில்லன் இவர் தானா: இன்னும் படத்தில் இணையவுள்ள பிரபலங்கள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட உள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே கசிந்து இருக்கிறது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இயக்குனரும், நடிகருமான உறியடி விஜயகுமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகுமார். படத்தின் கதையை கேட்டுவிட்டு அவருக்கு பிடித்து போக அவரும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X