சூர்யா கிரணின் மனைவி, தங்கை யார் தெரியுமா? இரண்டு பேருமே பிரபலம் ஆனாலும் உயிர் போச்சே!

சென்னை: பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பிறகு நடிகர் ஆகவும் இயக்குனராகவும் மாறிய சூர்யா கிரண் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் பிரபல நடிகையின் கணவர் என்பதும் பாக்யலட்சுமி சீரியலில் நடித்த நடிகையின் சகோதரர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

1980 காலகட்டத்தில் சினிமாவில் குழந்தை புகழ் பெற்ற மாஸ்டர் சுரேஷ். கல்லுக்குள் ஈரம், மௌன கீதங்கள், கடல் மீன்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், வேலைக்காரன், படிக்காதவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிறுவயது ரஜினியாக நடித்திருப்பார். மேலும் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அமிதாப் பச்சன் போன்றவர்களுக்கு இவர் தான் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்துள்ளார்.

Do you know who is the younger sister and wife of late actor Surya Kiran

சூரியா கிரண்: இவருக்கு டைரக்ஷன் மீது இருந்த ஆர்வத்தால், கமலஹாசன் மற்றும் ரவி தேஜாவிடம் ஸ்கிரிப்ட் ரைட்டிங்கை கற்றுக்கொண்டார். கவிதா முதல் கல்பனா வரை என்ற படத்தை இயக்கினார். தெலுங்கில் இவர் இயக்கிய நிஜாம் தேடு செஜாபாலி படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், அதன் பின் இவர் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்ததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சூர்யா கிரண், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

வரலட்சுமி நடிக்கும் அரசி: இவர் வரலட்சுமி சரத்குமாரை வைத்து அரசி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில், வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தா ராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, சாப்ளின் பாலு, மோகித் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இன்று இறுதிச்சடங்கு: இந்நிலையில், நடிகர் சூர்யா கிரண் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 49. அவரது இறுதிச்சடங்கு கே.கே.நகரில் உள்ள வீட்டில் இன்று நடைபெற உள்ளது. இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருவரும் பிரபலம்: நடிகர், இயக்குநர் என 30 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் கலக்கிக் கொண்டு இருந்த சூர்யா கிரண், விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவின் அண்ணன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நடிகை சுஜிதாவும் குட்டி குழந்தையாக முந்தானை முடிச்சு படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல், நடிகை காவேரியின் முன்னாள் கணவரும் ஆவார். நடிகை காவேரி சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். நடிகை காவேரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X