11 வருட திருமண வாழ்க்கை.. ஏமாற்றிய அத்தை மகன்.. மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி யார் தெரியுமா?

சென்னை: சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நபராக மாறி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சமையல் கலைஞராக மட்டும் இல்லாமல் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராகவும் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இந்த நிலையில் தான் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக இருக்கும் போது விட்டுவிட்டு சென்று விட்டதாக புகார் கூறியிருந்தார். இது சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியான ஸ்ருதி ரங்கராஜ், நான் என் கணவருக்கு துணையாக இருப்பேன் என் பதிவிட்டு புயலை கிளப்பி உள்ளார். பல பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் ஸ்ருதியின் இந்த செயல் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ள நிலையில், யார் இந்த ஸ்ருதி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Madhampatty Rangaraj Shruthi Rangaraj joy crizildaa
Photo Credit:

மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி: கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ருதி ரங்கராஜ். சொந்த அத்தை மகனான மாதம்பட்டி ரங்கராஜ், இளம் வயதிலேயே 2013 ஆம் ஆண்டே பெற்றோர் முன்னிலையில் மிகவும் எளிமையாக இவர்களில் திருமணம் நடந்தது. திருமணமான சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அந்த புகைப்படங்களை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

ஸ்ருதி ரங்கராஜ்: ஸ்ருதி அவர்களின் தந்தை ராஜகோபால் ஒரு வழக்கறிஞர் என்பதால் ஸ்ருதிக்கும் வழக்கறிஞராக வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. பி.ஏ படித்த ஸ்ருதீ அதைத் தொடர்ந்து எம்.பி.ஏ படித்து முடித்துவிட்டு அப்பாவின் ஆசைப்படி 'LLB' படித்துள்ளார். ஆனால், இவர் வழக்கறிஞராவதற்குள் ஸ்ருதியின் தந்தை இறந்துவிட்டார். இருந்தாலும், அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என ஸ்ருதி தனது பதிவில் தனது அப்பா குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். பேஷன் டிசைனிங் முடித்துள்ள ஸ்ருதி, 2018 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் நடந்த அழகிப்போட்டி நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.

துரோகம் செய்யலாமா?: அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்ட ஸ்ருதி ரங்கராஜ், கோவை திமுக மாணவரணி செயலாளராக உள்ளார். சமூக சேவகியாகவும், அரசியல்வாதியாகவும் மக்களுக்கு பல உதவிகளை ஸ்ருதி செய்து வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரசியல் தொடர்பான செய்திகளையும், விழிப்புணர்வு தொடர்பான வீடியோ, மத்திய அரசுக்கு எதிராக பதிவுகளை ஸ்ருதி பகிர்ந்துள்ளார். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானாலும், இண்டிபெண்டன் வுமனாக இருந்து வாழ்க்கையில் தான் அடைய நினைத்ததை சுதந்திரமாக செய்து வருகிறார் ஸ்ருதி ரங்கராஜ். மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஸ்ருதிக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஆன நிலையில், ஆசைப்பட்டது திருமணம் செய்த அத்தை மகளுக்கு இப்படி ஒரு துரோகத்தை ரங்கராஜ் செய்யலாமா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X