'கூலி' யில் ரஜினிக்கு ஜோடி இல்லை.. ஆனால், மனைவியாக வந்த நடிகை யார் தெரியுமா?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன், பாலிவுட் நடிகர் ஆமிர்கான், கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனா, மலையாள நடிகர் சோபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருந்த இந்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த நடிகை யார் என்பது இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அந்த திரைப்படத்தைப் போல கூலி திரைப்படமும் ஒரு வெற்றி பெற்ற படமாக அமைந்துள்ளது. கூலி படத்தில் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடக்கின்றன. ஒரு முடிச்சு அவிழ்ந்த பின், அடுத்து எதிர்பாராத வகையில் இன்னொரு முடிச்சியை போட்டு படத்தை சுவாரஸ்யமாக ஆக்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஒரு சிலர் படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

coolie Rajinikanth Boxoffice
Photo Credit:

அதிரடியான வசூல்: கூலி படம் வெளியான முதல் நாளிலேயே ₹65 கோடி வசூலித்து உலக அளவில் ரூ.151 கோடியை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வெள்ளிக்கிழமை ₹54.75 கோடி வசூலித்தது, இது முதல் நாளைவிட சற்று குறைவான வசூலாகும். இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியை நெருங்கியுள்ளதாகவும், உலக அளவில் மொத்தமாக ரூ.300 கோடியை நெருங்கியிருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூலி படம் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

அந்த நடிகை யார்: இந்நிலையில் கூலி படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடி இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், ஒரே ஒரு காட்சியில் அதாவது பிளாஷ் பேக் காட்சியில் ரஜினிக்கு ஒரு மனைவி இருந்ததாகவும், அவர் கேஸ் வெடித்து இறந்து விட்டதாகவும் காட்சி வரும். ரஜினி மனைவியுடன் இருக்கும் ஒரே ஒரு போட்டோ மட்டும் கிடைக்கும். அந்த புகைப்படத்தில் இருப்பது யாரென்று யாருக்குமே சரியாக தெரியவில்லை. ஒரே ஒரு காட்சியில் அது வந்து சென்றுவிட்டதால் மனதில் நிற்கவில்லை. அதன் பின் அந்த நடிகை யார் என்று அலசி ஆராய்ந்து பார்த்த போது தான் அந்த நடிகை யார் என்று கண்டுபிடித்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை, பிரபல நடிகை ஷோபனாதான் என்று கூறப்படுகிறது. ஆனால், அது ஷோபனா தான் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X