“தலைவர் 169“ ஹீரோயின் யார் தெரியுமா?...சுட சுட வெளியான சுவாரசியத் தகவல் !
சென்னை : நெல்சன் இயக்கத்தில் ரஜினி அடுத்ததாக நடிக்கவுள்ள தலைவர் 169 திரைப்படம் குறித்த பல சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது.
பீஸ்ட் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த் படத்தையும் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற் தற்காலிகமாக தலைவர் 169 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை குறித்து ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அண்ணாத்த
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானத் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்திசுரேஷ்,சூரி,லிவிங்ஸ்டன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படத்தில், ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷின் அண்ணனாக நடித்திருந்தார். அண்ணன், தங்கை செண்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இப்படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது.

தலைவர் 169
ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது. இதையடுத்து, யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் தலைவர் 169 பட அப்டேட் வெளியானது. அதில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குநர் ரஜினி படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கதாநாயகி யார் தெரியுமா?
இந்நிலையில், தலைவர் 169 திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், ஜூலை மாத இறுதியில் தலைவர் 169 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. எந்திரன் திரைப்படத்தில் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர உள்ளார்.

சுவாரசியத் தகவல்
தலைவர் 169 படத்தில் இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் இருப்பதாகவும் இந்த பிளாஷ்பேக் தான் படத்தின் மொத்த கதைக்கும் உயிரோட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் திரைத்துறைக்குள் நுழைந்து ஆகஸ்ட் மாதத்துடன் 47 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தலைவர் 169 திரைப்படத்தின் டீசர் அல்லது மோஷன் போஸ்டரை ஆகஸ்ட் மாதம் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.

சம்பளத்தை உயர்த்திய ரஜினி
தலைவர் 169 படத்தில் தன்னுடைய சம்பளத்தை ரஜினிகாந்த் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அவர் அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி ரூ 150 கோடி கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர் நிறுவனமும் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











