Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏ.ஆர். ரஹ்மானோ, அனிருத்தோ இல்லை.. ’தலைவர் 168’ இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Recommended Video
சென்னை: தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள 'தலைவர் 168' படத்திற்கு இமான் தான் இசையமைக்கவுள்ளார்.
தொடர்ந்து ரஜினியின் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் தான் இசையமைத்து வந்தனர்.
பா. ரஞ்சித் இயக்கிய கபாலி மற்றும் காலா படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் முதன் முறையாக இசையமைத்து வந்தார்.
இந்நிலையில், சிறுத்தை சிவா படங்களுக்கு இசையமைத்து வந்த இமான் இசையமைக்கவுள்ளார் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
தங்கச்சியா நடிச்சிருக்கக் கூடாது.. இப்போது புலம்பும் பிரபல நடிகை!
தர்பார் டப்பிங்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். தர்பார் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தர்பார் படத்திற்கான டப்பிங் பணியை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னையில் தொடங்கியுள்ளார்.
ரசிகர்கள் கோரிக்கை
தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளையாவது விரைவில் வெளியிடுங்கள் என இசையமைப்பாளர் அனிருத் மற்றும் லைகா நிறுவனத்துக்கு ரஜினியின் ரசிகர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இம்மாத இறுதிக்குள் அவர்களின் கோரிக்கை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
தலைவர் 168
நடிகர் ரஜினிகாந்தின் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிவா ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதால், தல ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அசுரன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர் குறித்த பேச்சும் அடிபட்டு வருகிறது. விரைவில் 'தலைவர் 168' நாயகிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
விஸ்வாசம்
இயக்குநர் சிவாவின் சிறுத்தை மற்றும் வீரம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். வேதாளம் மற்றும் விவேகம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால், அத்தனை படங்களை விட இறுதியாக அஜித் - சிவா கூட்டணியில் வெளியான விஸ்வாசம் விஸ்வரூப வெற்றியை அடைந்த நிலையில், அந்த படத்திற்கு இசையமைத்த டி. இமானுக்கு 'தலைவர் 168' படத்தில் இசையமைக்கும் ராஜயோகம் அடித்துள்ளது.