பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்..ஜஸ்ட் மிஸ்ஸான ஆண் போட்டியாளர்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அவர்கள் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 5 பேர் எலிமினேட் ஆகி வெளியேறி உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறும் பேட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 7ந் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு 46 நாட்களை கடந்துள்ளது. இதுவரை, இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக தயாரிப்பாளர் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரியா ஆகியோர் வெளியேறி உள்ளனர். கடந்த வாரம் பள்ளிக்கூட டாஸ்க் நடைபெற்ற நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ராஜா, ராணி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ராஜாவாக ரானாவும், ராணியாக சாச்சனாவும் நடித்து வருகின்றனர். வழக்கம் போல ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் இடம் பெறும் என்பதால், இந்த டாஸ்கில் எந்தவிதமான சுவாரசியமும் இல்லாமல் மொக்கையாகத்தான் இருக்கிறது.

டேஞ்சர் ஜோனில்: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக மஞ்சரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இந்த வாரத்திற்கான நாமினேஷனில் முத்துக்குமரன், செளந்தர்யா, விஷால், ராணவ், ஜாக்குலின், அருண் பிரசாத், பவித்ரா, ரயான், தர்ஷிகா, வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா, சிவக்குமார் என மொத்தம் 13 போட்டியாளர்கள் சிக்கினர். இதில் முத்துக்குமரன் மற்றும் செளந்தர்யா அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். மேலும், குறைந்த வாக்குகளை பெற்று வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா மற்றும் சிவக்குமார் ஆகியோர் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.
இந்த வாரம் வெளியேறுவது யார்: இதில், சிவக்குமார் குறைந்த வாக்குகளை பெற்ற போதும், ஆண்கள் அவரை நாமினேஷன் பாஸ் கொடுத்து காப்பாற்றிவிட்டதால் அவர் தப்பித்துவிட்டார். இதனால், குறைந்த வாக்குகளை பெற்ற சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிசை சாச்சனா பிக்பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில் இரண்டாவது முறையாக அவர் மீண்டும் வெளியேறி உள்ளார். நடிகை சாச்சனா மகாராஜா படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











