அதிதி என் தங்கச்சி மாதிரி..கை கூப்பி மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்..பின்னணி என்ன தெரியுமா?
சென்னை : விருமன் படம் பார்த்துவிட்டு அதிதி ஷங்கரை காதலிப்பதாக கூறிய கூல் சுரேஷ் திடீரென அந்தர் பல்டி அடித்ததன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன்.
இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த திரைப்படத்தின் மூலம் அதிதி ஷங்கர் முதல் முதலாக ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

விருமன்
விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ந் தேதி திரையரங்கில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. கார்த்தியின் தாத்தாவாக ராஜ்கிரண், அப்பாவாக பிரகாஷ் ராஜ், அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளனர். இந்த படத்தில் அதிதி ஷங்கர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிதிக்கு இது முதல் படம் போல இல்லாமல் ஆட்டம் பாட்டம் என அனைத்தையும் கச்சிதமாக செய்து பாராட்டை பெற்றுள்ளார்.

ஐ லவ் யூ அதிதி
இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த கூல்சுரேஷ், ஷங்கர் சார் நான் உங்கள் மகள் அதிதியை காதலிக்கிறன்...ஐ லவ் யூ அதிதி என எழுதப்பட்ட பேப்பருடன் வெளியே வந்து பேட்டி கொடுத்தார். அதில், ஷங்கர் சார், நீங்கள் படத்தில் எப்படி காதலர்களை சேர்த்து வைக்கிறீர்களோ அதே போல என்னையும் அதிதியை சேர்த்து வையுங்கள், இல்லை என்றால் கமிஷ்னர் அலுவலகம் போவேன், முதலமைச்சர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியிருந்தார்.

என் தங்கச்சி அதிதி
அதன்பின் என்ன ஆச்சு என்று தெரியவில்லை திடீரென ஒரு படத்திற்கு விமர்சனம் கொடுக்க வந்த கூல் சுரேஷ், சங்கர் சார்..என்னை மன்னித்துவிடுங்கள்,. விருமன் படத்தில் வரும் தேன்மொழி கதாபாத்திரம் போன்று இருக்கும் பெண்ணை நான் காதலித்தேன். அதை பார்த்த விரக்தியில் இப்படி நடந்து கொண்டேன் அதிதி சங்கர் இனிமேல் என் தங்கச்சி என்றும் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கெஞ்சி கை கூப்பி மன்னிப்பு கேட்டிருந்தார்.

தேவையா இதல்லாம்
கூல் கூரேஷ் அப்படி அந்தர் பல்டி அடிக்க காரணம் ஷங்கர் தானாம், கூல் சுரேசை அழைத்து சரமாறியாக விளாசியதாகவும், உடனடியாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படி கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிகை எடுக்கப்படும் என மிரட்டியதால், கூல் சுரேஷ் ஒரே அடியாக அந்தர் பல்டி அடித்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலர் ரசிகர்கள் இது எல்லாம் தேவையா உனக்கு என்று கூல் கூரேசை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











