அரசியலில் இருந்து ஏன் விலகினேன் தெரியுமா?.. ரஜினிகாந்த் கொடுத்த விளக்கம்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதன்முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 70சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன்,தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்தில் கமிட்டாகி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கலந்து கொண்டார். இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய ரஜினிகாந்த், அறிவு சொல்லும் என்ன பேச வேண்டும் என்றும், திறமை சொல்லும் எப்படி பேசவேண்டும் என்று, அனுபவம் சொல்லும் என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்று.

கவனமாக பேச வேண்டும்
ஆனால், இங்கே, என் அனுபவமும், அறிவும் சொல்லுது, இங்கே எதற்கு பேச ஏன் ஒத்துக்கிட்டே என்று கேட்கிறது. இதனால், ரொம்ப கவனமாக பேச வேண்டும், நான் போகும் மற்றக்கூட்டங்களைப் போல இந்த கூட்டம் இல்லை. பேஸ்புக், ட்விட்டர், இணையத்தில் படித்ததை எல்லாம் இங்கே வந்து பேசிவிட்டு போய்விட முடியாது ரொம்ப அளவாக பேச வேண்டும் என்றார்.

ரஜினி பேச்சு
தொடர்ந்து பேசிய ரஜினி, அரசியலில் இருந்து விலகியதற்காக காரணத்தை கூறினார். அதில், நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக தொடங்கி இருந்தது. அந்த நேரத்தில், நான் வெளியில் வந்தால், உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார். அப்படி வெளியில் செல்வதாக இருந்தால், மாஸ்க் போட்டுக்கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

அரசியலில் இருந்து விலக காரணம்
தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் வெளியில் சென்றால், முககவசத்தை கழற்ற வேண்டியிருக்கும். அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் முடியாத செயல். இதை எப்படி மக்களிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தேன். அப்போது என்னுடைய மருத்துவர், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களிடம் நான் கூறுகிறேன். ரசிகர்களிடம் நான் விளக்கம் அளிக்கிறேன் என்று கூறி எனக்கு துணையாக நின்றார். அதன்பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தேன் என்றார்.


Click it and Unblock the Notifications