சல்மான்கானுக்கு 49, தங்கை அர்பிதாவுக்கு 25..! ஏன் இந்த வயசு வித்தியாசம் தெரியுமா?
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதாவுக்கு இரு தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், 49 வயதான சல்மான் கானின் தங்கைக்கு இப்போதுதான் திருமணம் நடக்கிறதா? அப்படியானால் தங்கை இத்தனை நாட்களாக முதிர் கன்னியாக இருந்தாரா? என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுந்திருப்பது இயல்புதான். அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கால ஓட்டத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும்.
சல்மான் கானின் தந்தை சலிம்கான், பாலிவுட் படங்களில் நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராக இருந்தார். இவரது மனைவி சல்மா கான். இத்தம்பதிகளுக்கு சல்மான்கான், அர்பாஸ் கான், சோகைல் கான், அல்விரா கான் ஆகிய பிள்ளைகள் இருந்த நிலையில், பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் இருந்த அர்ப்பிதாவை சலிம்கான் தத்தெடுத்து வளர்த்தார்.

எனவேதான், அண்ணன் சல்மான்கானுக்கு 49 வயதாகும் நிலையில், அர்ப்பிதாவுக்கு தற்போதுதான் 25 வயதானது. தத்தெடுத்த குழந்தை என்று நினைக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அர்பிதாவுடன் மிகுந்த பாசம் காண்பித்தனர். அதிலும் சல்மானைவிட சோகைல்கான் தான் அர்பிதாவின் ஃபேவரைட் அண்ணனாம்.
லண்டன் காஹேஜ் ஆப் பேஷன் கல்லூரியில் பேஷன் மார்க்கெட்டிங் மற்றும் மேலாண்மை படித்த அர்ப்பிதாவுக்கு அவரது காதலன் ஆயுஷ் ஷர்மாவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
சல்மான்கான் 1965ம் ஆண்டு டிசம்பரில் பிறந்தவராகும், ஆனால் அர்பிதா 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தவர். இதுதான் வயது வித்தியாசத்திற்கான காரணம்.


Click it and Unblock the Notifications











