கீர்த்தி சுரேஷுக்கு No சொன்ன சிவகார்த்திகேயன்... ஏன் தெரியுமா?
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார்
அதை தொடர்ந்து ஜாதி ரத்தனாலு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடன் ஜோடியாக நடிப்பதற்கு No சொன்னதாக சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ இப்பொழுது வைரலாகிறது.

ஃபேமிலி என்டர்டைன்மென்ட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அது நிச்சயமாக ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாகத்தான் இருக்கும். காமெடி, காதல், குடும்ப காட்சிகள் என அனைத்தும் நிரம்பிய கமர்சியல் திரைப்படங்களாக இருக்கும்.

ஓடிடியில் நேரடியாக
அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பல தடைகளை சந்தித்து ஓடிடியில் நேரடியாக வெளியாக இருந்து பின் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது

கல்லூரி மாணவராக
புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் முன்னுரிமை கொடுக்கும் சிவகார்த்திகேயன் இப்போது இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். முற்றிலும் கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

தெலுங்கிலும் அறிமுகமாகிறார்
டான் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது இதை தொடர்ந்து தெலுங்கில் ஜாதி ரத்னாலு என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிறது இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது

க்யூட் ஜோடிகளாக
தமிழ் சினிமாவில் அனைவரும் ரசிக்கும் க்யூட் ஜோடிகளாக சிலரைச் சொல்லலாம் அதில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியும் உள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ரஜினி முருகன் என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

கீர்த்தி சுரேஷுக்கு No
இந்த படத்தில் இவரது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதைத்தொடர்ந்து ரெமோ படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த நிலையில் ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க சிவகார்த்திகேயன் No சொன்னதாக சிவகார்த்திகேயன் கூறிய வீடியோ ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகிறது.
Recommended Video

படக்குழுவிடம் சொன்னேன்
அதற்கு காரணமாக சிவகார்த்திகேயன் கூறியதாவது: ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஒரு ஜோடி அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்தால் உடனே கிசுகிசுவை கிளப்பி விடுவார்கள். எனவே ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வேண்டாம் என படக்குழுவிடம் சொன்னேன்.

ரொம்பவே அழகாக நடித்து இருப்பார்
ஆனால் பிசி ஸ்ரீராம் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக போடலாம் என கூறினார்கள். பின் வேறு கதாநாயகிளிடம் கேட்டேம் அதில் சிலர் என்னுடன் நடிக்க முடியாது என கூறினார்கள் அதற்கு நன்றி ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரொம்பவே அழகாக நடித்து இருப்பார். இவ்வாறு கீர்த்தி சுரேஷுக்கு No சொன்னதற்கான காரணத்தை சிவகார்த்திகேயன் ரெமோ பட மேடையில் கூறியுள்ள வீடியோ இப்பொழுது வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











