கல்லுக்குள் ஈரம் பட நடிகை அருணாவை ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
சென்னை:இயக்குநர் பாரதிராஜா பல நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார். அவர் அறிமுகப்படுத்திய முக்கியமானவர்களில் நடிகை அருணாவிற்கு என்று தனி இடம் உண்டு.
80களில் 90களில் வந்த பல படங்களில் அருணா இல்லாத கதாபாத்திரங்கள் மிகமிக குறைவு அந்த அளவுக்கு கதாநாயகி, தங்கை என ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வந்துவிடுவார்.
திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 32ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் அருணா இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்க்கலாமா?

கல்லுக்குள் ஈரம் அருணா: முச்சேர்லா அருணா என்ற நிஜப்பெயர் கொண்ட இவர், படித்துக்கொண்டு இருக்கும் போதே தனது 15 வயதில், பாரதிராஜாவின் கண்ணில் பட கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இயக்குநர் பாரதிராஜா மீதான ஆழமான காதலை வெகுளித்தனமும் பயமும் கலந்த பரிமாணத்தில் வெளிப்படுத்தி அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.
அட்டகாசமான நடிப்பு: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். மேலும் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை தெலுங்கு ரீமேக்கில் ராதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அருணா. யதார்த்தமான கிராமத்துப் பெண்ணாக புடவையில் வந்து நம் மனதை வருடிய அருணா, விசுவின் பெண்மணி அவள் கண்மணி படத்தில் திமிரு பிடித்த பெண்ணாக நடித்திருப்பார்.

சினிமாவை விட்டு விலகினார்: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்திலேயே 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அருணா. 1970ம் ஆண்டு தொழிலதிபர் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து மொத்தமாக விலகினார். இப்போது வரை அவர் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. கணவருடன் பிசினசிற்கு உதவியாக இருக்கிறார்.

யூடியூப் சேனல்: திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாத அருணா தற்போது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து இருக்கும் அருணா சமையல், வீட்டுக்குறிப்பு, வீட்டு பராமரிப்பு போன்றவற்றை கொடுத்து வருகிறார். இவரது வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications