‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடல் நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த நடிகை பிரமிளா ஜோஷாய்யின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அட அந்த நடிகையா இவங்க என்று கேட்டு வருகின்றனர்.

அதிரடி ஆக்ஷன் படங்களில் பாய்ந்து பாய்ந்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் தான் வைதேகி காத்திருந்தாள். 1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் வெள்ளசாமி என்ற அழுத்தமான ரோலில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ரேவதி, கவுண்டமணி, செந்தில், பரிமளம், ராதாரவி, வடிவுக்கரசி, கோவை சரளா என பலர் நடித்திருந்தனர்.

Do you remember the actress Pramila joshai from the movie vaidhegi kaathirundhaal

எண்பதுகளில் வெளியான பல திரைப்படங்கள் பிரமாண்டமான வெற்றிக்கு இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணமாக இருந்தது. அப்படி வைதேகி காத்திருந்தாள் படத்தின் வெற்றிக்கு பாடல்களுக்கு என்று தனி இடம் உண்டு.

வைதேகி காத்திருந்தாள்: ஆசை ஆசையாக காதலித்த முறைப்பெண் இறந்து போக வெள்ளைச்சாமியான விஜயகாந்த், தாடியும் பரட்டைத்தலையுமாக ஊர் மக்கள் சொல்லும் வேலைகளைச் செய்யும் அப்பாவியாக வாழ்ந்து வருகிறார். இரவு ஆனால் காதலியை நினைத்து நினைத்து பாடி வருகிறார். பல்வேறு தடைகளால் காதலை இழந்த, இணைய முடியாமல் போன, காதலர்களை தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேர்த்து வைப்பார் இதுதான் இந்த படத்தின் கதை. இந்த கதைக்களத்தைக் கொண்டு விஜயகாந்த்தே நடித்த பூந்தோட்டக் காவல்காரன், செந்தூரப் பூவே போன்ற சில திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

Do you remember the actress Pramila joshai from the movie vaidhegi kaathirundhaal

முறைப்பெண்: வெள்ளைச்சாமியின் முறைப்பெண்ணான வைதேகி என்ற கதாபாத்திரத்தில் கன்னட நடிகை பரிமளா நடித்திருந்தார். இவர் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும், அழுத்தமான இவரின் கதாபாத்திரம் அப்படியே மனதில் பதிந்து விட்டது. குறிப்பாக ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடலிலும்...காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி பாடலிலும் வந்து செல்லும் இவரின் முகத்தை மறக்கவே முடியாது. சூப்பர் ஹிட்டடித்த இந்த பாடல் இன்றைய இளசுகளுக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது.

Do you remember the actress Pramila joshai from the movie vaidhegi kaathirundhaal

மேக்னா ராஜின் அம்மா: கன்னட நடிகையான இவர் தற்போதும் அதே அழகுடன் இருக்கிறார். அண்மையில் இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அட அந்த நடிகையா இவங்க என்று கேட்டு வருகின்றனர். இவரின் மகள் தான் கன்னட நடிகை மேக்னா ராஜ், மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மனைவியான இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் மாரடைப்பால் இருந்த போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் தற்போது தனது மகன் ரயானை அன்போடும் பாசத்தோடு கவனித்துக்கொண்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X