Don't Miss!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அடப்பாவமே, பொண்ணு கிடைக்காமல் ஆர்யா இப்படி ஆகிட்டாரே!
Recommended Video
சென்னை: ஆர்யாவை திருமணம் செய்ய விருப்பம் உள்ள பெண்கள் 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம்.
கோலிவுட்டில் ரொம்ம்ம்ம்ம்ப காலமாக சிங்கிளாக சுற்றுகிறார்கள் ஆர்யாவும், விஷாலும். இருவருக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆர்யா அமலா பாலுக்கு ப்ரொபோஸ் பண்ண அவர் நைசாக நழுவிவிட்டார்.
வீடியோ
ஆர்யா தனது திருமணம் குறித்து ஜிம்மில் பேசிய வீடியோ வெளியானது. ஆர்யாவுக்கு வீட்டில் பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
|
திருமணம்
ஜிம்மில் பேசிய வீடியோ லீக்கானது. ஆனால் அதில் பேசியவை உண்மை தான். என் திருமணத்திற்கு பெண் தேடுகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று கூறி ஆர்யா வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
ஆமாம்
ஆர்யாவின் வீடியோவை பார்த்த நாங்கள் அது உண்மையா இல்லை ஏதாவது பப்ளிசிட்டி ஸ்டண்டா என்று தெரிந்து கொள்ள அவர் கொடுத்த எண்ணுக்கு போன் செய்தால் ஆர்யாவின் குரல் கேட்டது. ஆனால் அது பதிவு செய்யப்பட்ட ஒன்று.
விபரம்
என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி. உங்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வந்திருக்கும். அதில் உள்ள இணைப்பை க்ளிக் செய்து உங்களின் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள். நாம் சந்திக்கலாம் என்று ஆர்யாவின் குரல் ஒலித்தது.
க்ளிக்
எஸ்.எம்.எஸ்.ஸில் வந்த லிங்கை க்ளிக் செய்தால் அதில் நம் பெயர், வயது, முகவரி, பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் முடியும் தேதி, தாய் மொழி உள்ளிட்ட விபரங்களை கேட்கிறார்கள். மேலும் 1 நிமிட வீடியோவையும் அப்லோடு செய்ய கேட்கிறார்கள். நல்லா இருக்கு ஆர்யா, நல்லா வருவீங்க பாஸு.