»   »  செக்ஸி உதடுகள் வேண்டுமா?: ஆர்யா சொல்வதை கேளுங்க

செக்ஸி உதடுகள் வேண்டுமா?: ஆர்யா சொல்வதை கேளுங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவர்ச்சியான உதடுகள் வேண்டுமானால் எங்கு செல்ல வேண்டும் என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் ஹீரோவானவர் சேதுராமன். அவர் தோல் மருத்துவர் ஆவார். தனது நண்பர் சந்தானத்திடம் என்னை ஏன் நீங்க ஹீரோவாக்கக் கூடாது என்று அவர் விளையாட்டாக கேட்டார்.

அதன் பிறகு சந்தானம் சேதுவை ஹீரோவாக்கிவிட்டார்.

சேது

சேது

சேதுவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றது. இருப்பினும் அவருக்கு மேக்கப் அறையை விட தனது மருத்துவமனை தான் மிகவும் பிடித்துள்ளது.

மருத்துவமனை

மருத்துவமனை

ஜி ஈஸ்தெடிக் மற்றும் லேசர் கிளினிக் என்ற பெயரில் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார் சேது. சேதுவின் தந்தையும், சகோதரியும் கூட மருத்துவர்களே.

ஆர்யா

சேதுவின் கிளினிக்கிற்கு ஆர்யா பப்ளிசிட்டி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கவர்ச்சிகரமான உதடுகள் வேண்டுமா? என் நண்பர் நடிகர் மருத்துவர் சேதுராமனை சந்திக்கவும் என தெரிவித்துள்ளார்.

கடம்பன்

ஆர்யா கடம்பன் படத்தில் நடித்துள்ளார். கடம்பன் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடித்துள்ளார்.

English summary
Actor Arya tweeted that, Wanna have sexy lips meet my buddy actor doc iamsethuraman 👍Promo 4 lip filler https://m.youtube.com/watch?feature=youtu.be&v=fTZoCxZ3b2I … 😘😘really top class #ziclinic 👏👏'
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil