விஜய்யோட பர்த்டே பார்ட்டி போட்டோஸ் பார்க்கணுமா... வாரிசு நடிகை சொன்ன செம தகவல்
சென்னை : விஜய்யின் 48 வது பிறந்தநாள் ஜுன் 22 ம் தேதி கொண்டாடப்பட்டது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தனர். திரை பிரபலங்கள் பலர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், இதுவரை யாரும் பார்க்காத போட்டோக்களை வெளியிட்டனர்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக்கை படக்குழு வெளியிட்டது. படத்தின் டைட்டிலும் வெளியிடப்பட்டது.
விஜய்யின் வாரிசு படத்தின் போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடினர். அதே சமயம் மற்றொரு புறம் இதை மற்ற படங்களின் காப்பி என சொல்லி ட்ரோல் செய்து வந்தனர்.

தளபதி 67 அப்டேட் கேட்ட ரசிகர்கள்
தளபதி 66 படத்தின் டைட்டில், போஸ்டர்களை படக்குழு வெளியிட்டதால், தளபதி 67 படத்தின் அப்டேட் வருமா என எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி வரை வராததால் ஏமாற்றம் அடைந்தனர். எப்போது தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் என ஆர்வமாக கேட்க துவங்கினர். விஜய்யின் புதிய படங்கள் பற்றிய அப்டேட் மட்டுமல்ல, விஜய்யின் பிறந்தநாள் போட்டோக்கள் வருமா என்று எதிர்பார்த்தனர்.

போட்டோக்கள் வெளியிட்டனர்
ஆனால் கடந்த வருடம் பீஸ்ட் பட செட்டில் விஜய், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்கள் மட்டும் தான் வெளியானது. இதனால் இந்த வருட பிறந்தநாள் போட்டோக்கள் எப்போது வரும் என கேட்க துவங்கி விட்டனார். விஜய் எங்கிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.

பிறந்தநாளில் வேலை செய்த விஜய்
அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாமல் முதல் முறையாக விஜய், தனது பிறந்தநாளன்று வேலை செய்ததாக தகவல் வெளியானது. வாரிசு படத்தின் ஷுட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. போட்டோக்கள், வீடியோக்கள் கசியாமல் இருக்க பலத்த பாதுகாப்புடன் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

வாரிசு நடிகை சொன்ன தகவல்
இந்நிலையில் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் சங்கீதா கிருஷ் புதிய தகவல் ஒன்றை செல்லி உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரும் விஜய்யின் பிறந்தநாள் பார்ட்டி போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி கேட்கிறார்கள். ஆனால் அவற்றை தற்போது வெளியிட அனுமதி இல்லை என்பதை சொல்வதை மன்னித்து விடுங்கள்.

எப்போ வெளியிடுவீங்க
ஆனால் வரும் நாட்களில் வாரிசு விஜய் சாரின் அனுமதியுடன் விரைவில் வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு வாரிசு பட செட்டில் தான் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இதை கேட்டதும் விஜய் ரசிகர்கள் குஷியாகி சங்கீதாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











