லிங்க் கிடைக்குமா?ஓவியாவின் வீடியோவை பார்க்க ஒரு கூட்டமே அலையுது.. அசிங்கமா இல்லையா? விளாசிய நடிகை!

சென்னை: இணையத்தில் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இருப்பது ஓவியாவா இல்லை, ஏஐ அல்லது டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவா என குழப்பம் நிலவி வரும் நிலையில் இதுகுறித்து நடிகை ஷர்மிளா வீடியோ ஒன்றில் பேசி உள்ளார்.

நடிகை ஓவியா தொடர்பான அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் என்று இணைய வாசிகள் கூறி வந்தனர். வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று ஓவியா மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக ஓவியா போட்ட பதிலைப்பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.இதுமட்டுமில்லாமல் வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு ஓவியா, 'அடுத்த முறை ப்ரோ' என பதில் அளித்து வருகிறார்.

Oviya Video Sharmila

நடிகை ஓவியா: மேலும், இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோ குறித்து நடிகை ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டதாகவும், ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நடிகை ஓவியாவின் மேலாளர் தெரிவித்துள்ளார். தவறான வீடியோவை பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ லிங்க் கிடைக்குமா: இந்நிலையில் இதுகுறித்து பேசிய மருத்துவரும் நடிகையுமான ஷர்மிளா தனது யூடியுப் தளத்தில் பேசி உள்ளார். அதில், நடிகை ஓவியா மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார். அந்த வீடியோ சனிக்கிழமை வெளியான போது அனைவரும் அந்த வீடியோ குறித்து கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். பலருக்கு அந்த வீடியோவை பார்க்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. பலர் அந்த வீடியோ கிடைக்குமா என்றும், வீடியோ லிங்க இருந்த அனுப்புங்க என்று கேட்டு இருந்தனர். பொள்ளாச்சி சம்பவம், மேற்கு வங்க சம்பவம் என பிரச்சனைகளுக்கு கோவமா குரல் கொடுத்தவர்கள் இப்போது லிங்க் கிடைக்குமா என்று கேட்டு இருக்கிறார்கள்.

வக்கிரமான புத்தி: இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் ஆபாச வீடியோ கொட்டி கிடக்கிறது. அப்படி இருக்கும் போது சினிமாவில் நடித்த நமக்கு தெரிந்த ஒரு பெண்ணின் நிர்வாண வீடியோவை, அந்தரங்கத்தை பார்க்க வேண்டும் என்கிற வக்கிரமான புத்திய ஏன் இருக்கிறது. இந்த மனநிலை கொண்டவர்களிடம் இது தவறு இல்லையா என்று கேட்டால், ஓவியான ஒரு நடிகை தானே, லிங்க் கேட்பதில் என்ன தவறு இருக்கு என்று அவர்களின் தவறை நியாயப்படுத்தி பேசுகிறார்கள்.

பொறுக்கித்தனம்: ஓவியா ஒரு நடிகை என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. இதுபோன் ஆபாச படத்தில் நடிக்கும் நடிகையாக இருந்தாலும், அந்த பெண்ணின் அனுமதி இல்லாமல் இப்படி ஒரு வீடியோவை வெளியிடுவதும், அதை பார்ப்பதும் கண்டிக்க தக்கது தான், அது தவறுதான், வக்கிரம் தான். ஓவியா ஒரு நடிகை தான் என்று தவறை நியாயப்படுத்தி பேசுவது பச்ச பொறுக்கித்தனம். இதுபோன்றவர்கள் யாருடைய வீடியோ வந்தாலும் பார்ப்பார்கள் என்றார். மேலும், இந்த விஷயத்தில் நடிகை ஓவியா துவண்டு போகாமல் தைரியமாக பதில் அளித்தது பாராட்டுக்குரிய என்று நடிகை ஷர்மிளா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Read more about: oviya video sharmila ஓவியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X