பாக்ஸ் ஆபீஸில் ஒன்றாக களம் காணவுள்ளதா டாக்டர் & கோடியில் ஒருவன்!?
சென்னை: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் தயாராகியுள்ள படம் டாக்டர்.
ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிப்பில் தயாராகியுள்ள படம் கோடியில் ஒருவன்.
இந்த இரண்டு படங்களும் ரம்ஜானுக்கு ஒன்றாக பாக்ஸ் ஆபீஸில் களம் காணவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஹிட் அடித்த பாடல்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் மேல் எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. படக்குழுவினர் டீசர்/ட்ரைலர் ஏதும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் செல்லம்மா, நெஞ்சமே, ஓ பேபி என படத்தின் மூன்று பாடல்களும் வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

சட்ட மன்ற தேர்தல்
கடந்த மாதம் வெளியாக வேண்டிய இந்த படம் சட்ட மன்ற தேர்தல் காரணமாக தள்ளி போடப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இதையடுத்து படக்குழு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட உள்ளதாகவும் அப்போதே அறிவித்திருந்தது.

டியூஷன் வாத்தி
விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் இதுவரை விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி டியூஷன் வாத்தியாக நடித்துள்ளார். தமிழ் & தெலுங்கு மொழிகளில் இந்த படம் வெளிவரவுள்ளது.
Recommended Video

பாக்ஸ் ஆபிஸ் க்ளாஷ்
கடந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய கோடியில் ஒருவன் சில காரணங்களால் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படக்குழு படத்தை ரம்ஜான் அன்று டாக்டர் படத்துடன் சேர்த்து வெளியிட உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











