அடேங்கப்பா.. ரூபிக் க்யூப்களில் உருவான நயன்தாரா ஓவியம்.. மகளிர் தினத்தில் டாக்டர் செய்த சாதனை!
சென்னை: ரூபிக் க்யூப்களை யார் அதி வேகமாக சரியாக பொருத்துகிறார்கள் என்கிற போட்டி தான் வைரலாகும். ஆனால், தற்போது நயன்தாராவின் உருவத்தையே ரூபிக் க்யூப்களால் உருவாக்கி டாக்டர் ஒருவர் அசத்தி உள்ளார்.
மகளிர் தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நயன்தாரா நடித்த பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் டிவி, ரேடியோ, நிகழ்ச்சிகள் ஒளியும் ஒலியும் செய்யப்பட்டது.
நயன்தாரா நடித்த அறம் திரைப்படமும் சேனல் ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டு மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது.

லேடி சூப்பர்ஸ்டார்
மலையாளத்தில் டிவி சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்த டயானா மரியம் குரியன் 2003ம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் வெளியான மனசினக்கரே படம் மூலம் அறிமுகமானார். தமிழில் 2005ம் ஆண்டு சரத்குமாரின் ஐயா திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நயன்தாரா, தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் என்கிற அங்கீகாரத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளார்.

சிஏ படிக்க ஆசை
ஆங்கில இலக்கியம் படித்துள்ள நயன்தாரா சிஏ படிக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால், அவருக்கு இருந்த மாடலிங் ஆசை மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க சினிமா துறையில் தனக்கென ஒரு சிம்மாசனத்தை பிடித்துள்ளார் நயன்தாரா. பெண்களை மையப்படுத்தும் ரோல்களில் நயன்தாரா நடித்தாலே அந்த படம் ஹிட் தான் என்கிற ரீதியில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
மகளிர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கைகளையும் வைத்தனர். ஆனால், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிசியாக இருப்பதால், எந்தவொரு புதிய அறிவிப்பையும் விக்னேஷ் சிவன் வெளியிடவில்லை.
ரூபிக் க்யூப் ஓவியம்
மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் சந்திரிகா ரூபிக் க்யூப்களை பயன்படுத்தி பிரம்மாண்ட நயன்தாரா ஓவியத்தை வடிவமைத்து சாதனை செய்துள்ளார். மேலும், மகளிர் தின வாழ்த்துக்களையும் ரூபிக் க்யூப்களாலே செய்து அசத்தி தனது திறமையையும் நயன் மீது பெண்களுக்கு உள்ள அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். விக்னேஷ் சிவன் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளார்.

கம்பீரம்
அறம் படத்தில் கலெக்டர் மதிவதனி கதாபாத்திரத்தில் கம்பீரமாக நயன்தாரா நடித்து அசத்தி இருப்பார். சினிமா துறையில் சிங்கபெண்ணாக இருக்கும் நயன்தாரா பல இளம்பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பது பெருமைக்குரிய விஷயம் தான். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சினிமா உலகை ஆட்சி செய்வதெல்லாம் நடிகைகளுக்கு பெரிய விஷயம் தான். அதனை சர்வ சாதாரணமாக சாதித்து வருகிறார் நயன்தாரா.

திருமண வதந்தி
இந்த மாதம் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகப் போகிறது என்கிற வதந்தி சமீபத்தில் வைரலானது. ஆனால், அது தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் அந்த வதந்தியை வதந்தியாகவே கடந்து போக செய்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











