ஆஸ்திரேலியாவை கலக்கும்.. சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடல்.. ட்ரெண்டிங் வீடியோ !

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படத்தில் இடம் பெறும் செல்லம்மா பாடல் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலும் கலக்கி வருகிறது.

டாக்டர் திரைப்படத்தில் நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியராகவும் பணியாற்றி உள்ள சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கும் டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது செல்லம்மா பாடல் உலகம் முழுவதும் வேற லெவல் வைரலாகி கலக்கி வருகிறது.

பட்டி தொட்டி எங்கும் பரவி

பட்டி தொட்டி எங்கும் பரவி

தமிழ் சினிமாவில் வெளியாகும் பாடல்கள் அவ்வப்போது உலக மக்களையும் கவர்ந்து வைரலாகி வரும் நிலையில், குறிப்பாக அனிருத் இசையில் உருவான "ஒய் திஸ் கொலவெறி" பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்து இணையதளத்தில் மிகப்பெரிய வைரலானது.

100 கோடி பார்வையாளர்கள்

100 கோடி பார்வையாளர்கள்

ஒய் திஸ் கொலவெறி பாடலை தொடர்ந்து சமீபத்தில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களை நெருங்கி இந்திய அளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை செய்து வரும் நிலையில், தற்பொழுது டாக்டர் திரைப்படத்தில் வரும் செல்லம்மா பாடலும் இந்தியாவைத் தாண்டி மிகப்பிரபலமாகி வருகிறது.

நகைச்சுவை கலாட்டா

நகைச்சுவை கலாட்டா

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவின் மாறுபட்ட வேடம் மற்றும் யோகி பாபுவின் இயல்பான நகைச்சுவை கலாட்டா என சில வருடங்களுக்கு முன்பு வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இயக்குனர் நெல்சன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நெருங்கிய நண்பர்களாக

நெருங்கிய நண்பர்களாக

சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருந்தபோதே இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் டாக்டர் திரைப்படத்தின் மூலம் இணைகின்றனர். இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன்பு மிக வித்தியாசமான முறையில், கலகலப்பான வீடியோவுடன் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது.

டாக்டர் திரைப்படத்தில்

டாக்டர் திரைப்படத்தில்

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே கோலமாவு கோகிலா திரைப்படத்தில் வரும், கல்யாண வயசு பாடலை எழுதி இருந்த நிலையில் தற்போது மீண்டும், டாக்டர் திரைப்படத்தில் செல்லம்மா பாடலை எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் அனிருத் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ள நிலையில், இப்பாடல் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இன்று வரை வைரலாகி வருகிறது.

Recommended Video

V-CONNECT | ACTOR ASHWIN CHAT | SONG இல்லாம தான் DANCE பண்ணேன் | FILMIBEAT TAMIL
நம்ம ஊரு பாணியில்

நம்ம ஊரு பாணியில்

இந்தியாவில் உருவாகும் பாடல்கள் அவ்வப்போது வெளிநாடுகளிலும் வைரலாகி வரும் நிலையில், தற்பொழுது செல்லம்மா பாடல் ஆஸ்திரேலியாவில் களை கட்டுகிறது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று அதை நிரூபிக்கும் விதமாக ஆஸ்திரேலியா மக்கள் பலரும் செல்லம்மா பாடலுக்கு நம்ம ஊரு பாணியில் குத்து நடனமாடி அசத்தி இருக்கும் அந்த வீடியோ தற்பொழுது அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X