வாட்டர் பர்த் மூலம் குழந்தை பெற்ற நகுல் மனைவி.. கிளம்பிய சர்ச்சை.. மருத்துவர் அதிரடி விளக்கம்!

சென்னை: பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நகுல்.

Recommended Video

Actor Nakkhul & Shruti Blessed with Baby Girl

கடந்த மாதம் நடிகர் நகுல் மனைவிக்கு வாட்டர் பர்த் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது.

அலோபதியை நம்பாதீங்க, இப்படி இயற்கை முறையிலேயே பிரசவம் பண்ணுங்க என்ற விளம்பரம் கிளப்பிய சர்ச்சைக்கு தற்போது மருத்துவர் சவீதா கதிரவன் ட்வீட் போட்டு விளக்கம் அளித்திருப்பது வைரலாகி வருகிறது.

படங்கள் ஓடவில்லை

படங்கள் ஓடவில்லை

பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி என ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த நடிகர் நகுல், அதன் பிறகு நடித்த பல படங்கள் படு தோல்வியை தழுவின. சமீபத்தில் வந்த நாரதன், பிரம்மா.காம், செய் உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, நடிகர் நகுலின் மார்க்கெட் அதள பாதாளத்திற்கு சென்றது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நடிகை தேவயாணியின் தம்பியான நகுல், தனது நீண்ட நாள் பெண் தோழியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை காதலித்து, கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி வந்த நடிகர் நகுல் மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது.

வாட்டர் பர்த்

வாட்டர் பர்த்

சுகப்பிரசவம் தான் வேண்டும் என்ற முடிவில் திடமாக இருந்த நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி, ஏகப்பட்ட ஆன்லைன் பிரசவ வகுப்புகளையும், மருத்துவர்களின் ஆலோசனைகளையும் நாடியுள்ளார். பின்னர், வாட்டர் பர்த் முறைப்படி குழந்தையை பெற்றுக் கொள்ளும் முடிவை கணவர் நகுலிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

12 மணி நேர போராட்டம்

12 மணி நேர போராட்டம்

இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஒரு வாட்டர் பர்த் மருத்துவமனைக்கு சென்ற நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி, சுமார் 12 மணி நேர பிரசவ வலியுடன் போராடி, வெது வெதுப்பான வாட்டர் டப்பில் கணவர் நகுல் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டு, போராடி, அழகான பெண் குழந்தையை பெற்றுள்ளார்.

அகீரா

அகீரா

வலிமை மற்றும் ஒளி நிறைந்தவள் எனும் அர்த்தம் கொண்ட அகீரா என்கிற பெயரை தனது மகளுக்கு நடிகர் நகுல் வைத்துள்ளார். மகள் அகீரா பிறந்து ஒரு மாதம் ஆன பின்னரே, சமீபத்தில் தனது மனைவியின் வாட்டர் பர்த் புகைப்படங்களையும், மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்தார்.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

நடிகர் நகுல் மனைவி வாட்டர் பர்த் மூலம் குழந்தை பெற்ற நிலையில், அலோபதி மருத்துவத்தை நம்ப வேண்டாம், நடிகர் நகுல் மனைவி மாதிரி இயற்கை முறையில் இப்படி பிரசவம் செய்து கொள்ளுங்கள். அறுவை சிகிச்சை செய்து காசுகளை தனியார் மருத்துவர்கள் பிடுங்கி வருகின்றனர் போன்ற சர்ச்சை விளம்பரங்கள் சமூக வலைதளத்தில் பரவ ஆரம்பித்தன.

மருத்துவர் விளக்கம்

மருத்துவர் விளக்கம்

இந்நிலையில், மருத்துவர் சவீதா கதிரவன், ஹைதராபாத்தில் உள்ள Sanctum Birth Centreல் மருத்துவர்களின் உதவியோடு தான் நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு பிரசவம் நடைபெற்றது என்றும், மருத்துவர்கள், நர்ஸ்கள் என அனைவரது முன்னிலையில் தான் இது நடந்தது. இந்த அறிவியல் உண்மையை அறியாமல் குறை கூறுவது ஆபத்து என ட்வீட் போட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X