தமிழ்நாடு பாக்ஸ் ஆபீசில் ரூ.70 கோடியை கடந்த டாக்டர் வசூல்

சென்னை : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ்ஆபீசில் நல்ல வசூலை பெற்றுள்ள இந்த படம் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.

Doctor crosses Rs.70 crore in Tamilnadu boxoffice collection

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் லீட் ரோலில் நடித்த இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடத்தப்பட்ட பெண் குழந்தையை காப்பாற்ற சிவகார்த்திகேயன் போராடுவது தான் படத்தின் கதை. கேஜெஆர் ஸ்டூடியோஸ் உடன் சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் இது.

கொரோனா லாக்டவுனிற்கு பிறகு தியேட்டரில் வெளியிடப்பட்ட பெரிய நடிகரின் படம் என்பதால் தியேட்டர் உரிமையாளர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய படம் டாக்டர். டார்க் காமெடி படமான டாக்டர் படம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டாக்டர் படம் ஏற்கனவே உலக அளவில் ரூ.100 கோடி பாக்ஸ்ஆபீஸ் கிளப்பில் இணைந்து விட்டது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, டாக்டர் படம் தமிழ்நாட்டில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. ரிலீசான ஒரு மாதத்தில் இந்த படம் ரூ.70 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை கடந்து விட்டதாம்.

உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து விட்ட டாக்டர் படம் தான், சிவகார்த்திகேயன் நடித்ததிலேயே அதிக வசூலை பெற்ற படமாகும். தீபாவளி ஸ்பெஷலாக டாக்டர் படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இருந்தாலும் தியேட்டர்களில் டாக்டர்கள் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது.

கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படம் வெளியாகி உள்ளது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் பல முறை டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு திட்டவட்டமாக அறிவித்து, சொன்னபடியே காத்திருந்து, தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் டாக்டர் படத்தை தயாரிப்பாளர் ரிலீஸ் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X