டாக்டர் டப்பிங் பணிகள் முடிந்தது.. இயக்குனருக்கு நன்றி கூறி சிவகார்த்திகேயன் ட்வீட்!

சென்னை : கோலமாவு கோகிலா திரைப் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கும் திரைப்படம் டாக்டர்.

மருத்துவத் துறையை பற்றியும் அதில் நடக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றியும் எடுத்துரைக்கும் ஆக்ஷன் கலந்த கமர்சியல் திரைப்படமாக டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிந்து இப்போது டப்பிங் பணிகளும் முடிவடைந்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை சிவகார்த்திகேயன் கூறி இயக்குனருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இயக்குனரும் நண்பருமான

இயக்குனரும் நண்பருமான

தமிழ் சினிமாவின் இளவரசன் என அழைக்கக் கூடிய சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் கமர்சியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வெற்றி பெற்று வருவதோடு வேற்றுமொழி ரசிகர்களையும் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறது. இயக்குனரும் நண்பருமான நெல்சன் உடன் முதன்முறையாக இணைந்திருக்கும் டாக்டர் படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்தது.

வினய் வில்லனாக

வினய் வில்லனாக

தெலுங்கில் கேங் லீடர், ஸ்ரீகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை பிரியா அருள்மோகன் தமிழில் முதல்முறையாக டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட உன்னாலே உன்னாலே புகழ் வினய் வில்லனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

காமெடிக்கு பஞ்சமில்லாமல்

காமெடிக்கு பஞ்சமில்லாமல்

விஜே அர்ச்சனா, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வர இதன் படப்பிடிப்பு சென்ற சில வாரங்களுக்கு முன்பு முடிவுற்ற நிலையில் அதன் டப்பிங் வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று இப்பொழுது முடிந்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் தனித்தனியாக பணியாற்றும்போதே காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது இப்பொழுது முதல் முறையாக ஒன்றாக பணியாற்றியிருக்க செல்லம்மா செல்லமா பாடல் ப்ரோமோவே இவர்களது கூட்டணி எப்படி இருக்கும் என்று சிம்பாலிக்காக சொல்லிவிட்டது.

டப்பிங் வேலைகள் முடிந்தது

டப்பிங் வேலைகள் முடிந்தது

வரும் சம்மரில் டாக்டர் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது சிவகார்த்திகேயன் டப்பிங் வேலைகள் அனைத்தும் முடிந்தது, மறக்கமுடியாத தருணங்களை கொடுத்ததற்கு நன்றி நெல்சன் என இயக்குனருக்கு நன்றிகளை தெரிவித்தவாறு டப்பிங் ரூமிலிருந்து சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நின்று கொண்டு வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் கவர்ந்து விரைவில் திரையில் டாக்டர் திரைப்படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X