டாக்டர் படத்துல சிவகார்த்திகேயனுக்கு இவங்கதான் ஜோடியாம்.. யார் இந்த பிரியங்கா அருள் மோகன்? #Doctor
சென்னை: நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
#Doctor என்ற ஹாஷ்டேக்கில் சிவகார்த்திகேயன், யோகி பாபு மற்றும் அந்த படத்தின் நாயகி பிரியங்கா அருள் மோகனின் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
திடீரென டிரெண்டாகி வரும் இந்த ஹாஷ்டேக்கில் சிவகார்த்திகேயனின் புது ஜோடியை பார்த்த ரசிகர்கள் யாருடா இந்த பொண்ணு என கூகுளில் தேட தொடங்கி விட்டனர்.

சிவகார்த்திகேயன் நெக்ஸ்ட்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அடுத்ததாக நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தை கே.ஜே.ஆர் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

டிரெண்டாகும் ஹாஷ்டேக்
காலையில் எழுந்தவுடனே ட்விட்டரில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக சிவகார்த்திகேயன் போட்டோஷூட் புகைப்படங்களும், டாக்டர் பட போட்டோக்களும் டிரெண்டாகி வருகின்றன. #Doctor என்ற ஹாஷ்டேக்கில் டாக்டர் லுக்கில் சிவகார்த்திகேயன் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களின் மொபைல் டிபிக்களாக மாறி வருகின்றன.

கிரிக்கெட்டர் யோகி பாபு
தளபதி விஜய்யின் பிகில் மற்றும் கதிரின் ஜடா படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து கலக்கிய காமெடி கிங் யோகி பாபு, சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் கிரிக்கெட்டராக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் கிரிக்கெட்டர் லுக்கில் யோகி பாபு இருக்கும் புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

சிவகார்த்திகேயனின் புது ஜோடி
ஹீரோ படத்திற்காக கல்யாணி பிரியதர்ஷனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன். தற்போது, டாக்டர் படத்திற்காக டோலிவுட் நாயகி பிரியங்கா அருள் மோகனை களமிறக்கி உள்ளார். சேலையில், செம க்யூட்டாகவும், சிவகார்த்திகேயனுடன் போட்டில் செம ரொமான்ட்டிக்காகவும் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

யார் இவர்?
கன்னடத்தில் கடந்த ஆண்டு இயக்குநர் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். தொடர்ந்து, இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் நானி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கேங் லீடர் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார் இந்த அழகுப் புயல்.


Click it and Unblock the Notifications











