நெப்போலியன் மகனின் தாம்பத்திய வாழ்க்கை.. டெஸ்ட் டியூப் பேபிக்கு டிரை பண்ணலாம்.. டாக்டர் சொன்ன தகவல்!
சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுசுக்கு உறவுக்கார பெண்ணான அக்ஷயாவிற்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மகனுக்காக பல கோடிகளை நெப்போலியன் செலவழித்து இருக்கிறார். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கலா மாஸ்டர், மீனா, குஷ்பூ,ராதிகா,சரத்குமார் அவரின் மகன் ராகுல்,நடிகர் கார்த்தி என பலரும் நெப்போலியனுக்காக ஜப்பானுக்கு வந்து தனுஷின் திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ நேற்று இணையதளத்தில் வைரலானது. இதில், தனுசால் தாலி கட்ட முடியாது என்பதால், தாலி செயினை தனுஷின் கையை பிடித்து எடுத்து அம்மா எடுத்து கொடுக்க திருமணம் நடைபெற்றது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பலரும் தனுஷின் நோய் குறித்து பேசி வருகின்றனர்.

மருத்துவர் சொன்ன தகவல்: இதுகுறித்து, Arrowroot யூடியூப் சேனலுக்கு மருத்துவர் ஜெய ஸ்ரீ பேட்டி அளித்துள்ளார். அதில்,நெப்போலியனின் மகனுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. அனைவருடைய உடம்பிலும் மசில்ஸ் இருக்கும், அது நாம் வளர வளர அதுவும் சேர்ந்து வளரும். ஆனால், தசை சிதைவு நோய் இருப்பவர்களுக்கு, ஜீனிலேயே பிரச்சனை இருக்கும், இது பிறக்கும் போதே இருக்கும், இது அந்த நோயால் பாதிக்கப்பட்டவர் வளர வளர மசில்சை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். இந்த நோய் ஒரு குழந்தைக்கு இருக்கிறது என்பதே நான்கு வயதில் தான் தெரியவே வரும்.
ஸ்கேனில் தெரியாது: கர்ப்பமாக இருக்கும் போது ஸ்கேன் எடுத்து இருப்பார்கள் அதில் தெரிந்து இருக்குமோ என சிலர் கேட்பார்கள், ஸ்கேன் எடுப்பது என்பது குழந்தையின் முகம், மூக்கு,உதடு,கால்,விரல், இதயம் இது எல்லாம் நன்றாக வளர்ந்து இருக்கிறதா என்று பார்ப்பதற்கு தான், இதில், குழந்தை பிறந்த பிறகு எந்த நோயால் பாதிக்கப்படும் என்பதை சொல்ல முடியாது. இந்த தசை சிதை நோய், ஜீனிலேயே இருக்கக்கூடிய நோய் இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது: இந்த நோய் இருப்பவர்களால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. ஆனால், டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அதிலும் ஒரு பிரச்சனை இருக்கு, தனுஷூக்கு இந்த நோய் இருப்பதால், அடுத்த உருவாகக்கூடிய அந்த கருவிற்கும் இந்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் கரு உருவாகக்கூடிய அந்த விந்தணுவை எடுத்து பரிசோதித்தாலே, கரு முட்டையில் என்ன நோய் வரும் என்பது தெரிந்து விடும். இதனால் , இந்த நோய் பாதிப்பு இல்லாத கரு முட்டையை எடுத்து வளரவைத்து குழந்தையை உருவாக்கலாம். ஆனால், தனுசால் இல்லற வாழ்க்கையில் ஈடுபடமுடியாது என்று மருத்துவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











