நெப்போலியன் மகனுக்கு குழந்தை பிறக்குமா?.. அந்த பாக்கியம் நல்லாவே இருக்காம்.. மனம் திறந்த மருத்துவர்
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு சமீபத்தில் ஜப்பானில் திருமணம் நடந்து முடிந்தது. அவர் அக்ஷயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். டோக்கியோவில் பிரமாண்டமாக நடைபெற்ற அந்தத் திருமணத்தில் தமிழ் சினிமாவிலிருந்து ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். இத்திருமணத்தை பற்றி சிலர் விமர்சனம் செய்துவரும் சூழலில்; நெப்போலியனின் மகனுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து மருத்துவர் காமராஜ் பேசியிருக்கிறார்.
நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்று இருக்கும் இரண்டு மகன்களில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் வந்திருக்கிறது. அவரை எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டுமென்று இந்தியாவிலிருந்து வெளியேறி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு தனுஷுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடு, அவரை CEOவாக ஆக்கி ஒரு சாப்ட்வேர் கம்பெனி, ஆயிரம் ஏக்கர் அளவில் விவசாயம் என தனி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார் நெப்போலியன்.

திருமணம்: சூழல் இப்படி இருக்க தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து அக்ஷயா என்ற பெண்ணை பார்த்தார்கள் நெப்போலியனும் அவரது மனைவி சுதாவும். தசை சிதைவு நோய் வந்த ஒருவருக்கு திருமணமா என்று ஏகப்பட்ட பேர் விமர்சனம் செய்தார்கள். ஆனால் தனுஷை அக்ஷயாவுக்கு ரொம்பவே பிடித்துப்போனதை அடுத்து திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார். அதனையடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.
நட்சத்திர பட்டாளம்: அந்தத் திருமணத்தில் மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார் என பெரும் நட்சத்திர பட்டாளம் கலந்துகொண்டது. நடிகர் சிவகார்த்திகேயன் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் வீடியோ மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார். மேலும் ரஜினிகாந்த்தும் அமெரிக்காவுக்கு வரும்போது நேரில் வந்து சந்திப்பதாக உறுதியளித்திருக்கிறார் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தவிர்த்து சாதாரண ரசிகர்களும் தனுஷ் - அக்ஷயாவுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
குவிந்த சொத்து: இதற்கிடையே 100 பவுன் அளவில் நகையும், பல நூறு கோடி கணக்கில் வீடும் அக்ஷயாவுக்கு நெப்போலியன் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் இந்தத் திருமணத்தால் அக்ஷயாவின் வாழ்க்கைதான் வீணாகிவிட்டது. கண்டிப்பாக தனுஷுக்கு குழந்தையே பிறக்காது என்று பலர் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். அப்படி பேசியவர்களுக்கு கண்டனங்கள் வலுவாக எழவும் ஆரம்பித்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க மருத்துவர் காமராஜ் இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார்.
காமராஜ் பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தசை சம்பந்தப்பட்ட நோய் வந்தவர்களுக்கு முதலில் தசை பலமாக இருக்கும். போகப்போக அது பலவீனமடையும். இருந்தாலும் அவர்களால் அந்தரங்க விஷயத்தில் நன்றாகவே ஈடுபட முடியும். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸுக்குக்கூட குழந்தை இருக்கிறது. அதுமட்டுமின்றி இப்போது STERM CELL எல்லாம் வந்துவிட்டன. அதை வைத்துக்கூட குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். அதேசமயம் ADHD என்று சொல்லக்கூடிய மூளை சம்பந்தப்பட்ட நோய் வந்தவர்களுக்கு அந்தரங்க விஷயத்தில் நாட்டம் கொஞ்சம் கம்மியாகவே இருக்கும்.
வாய்ப்பு உண்டு: சமீபத்தில் ஒரு பிரபலத்தின் மகனுக்கு (தனுஷ்) திருமணம் நடந்து முடிந்தது. அவருக்கும் தசை சம்பந்தப்பட்ட நோய்தான் வந்திருக்கிறது. அவரால் அந்தரங்க விஷயத்தில் நன்றாகவே ஈடுபட முடியும். அதேசமயம் வீல் சேரில்தான் அவர் வாழ்க்கையை வாழ முடியும். இதெல்லாம் தெரிந்துதான் அந்தப் பெண் அந்த பையனை திருமணம் செய்திருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











