கீர்த்தி சுரேஷ் பரிதாபத்துக்குரியவர்..எல்லாத்துக்கும் அது மட்டும்தான்..பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) கீர்த்தி சுரேஷ் பரிதாபத்துக்குரியவர் என்று மருத்துவர் காந்தராஜன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

Doctor Kandharajan Talks about Actress Keerthy Suresh Career

முன்னணி நடிகர்களுடன்: அதன்படி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்தார். தமிழில் அவர் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்றார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு வரவில்லை.

மீண்டும் தமிழில்: இப்படிப்பட்ட சூழலில் தமிழில் அவர் கடைசியாக தமிழில் மாமன்னன் படத்தில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக ரகு தாத்தா படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் அட்லீயின் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் காரணமாக மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஹிந்தி என்ட்ரி?: அட்லீ தயாரிக்கும் படம் ஹிந்தியில் உருவாகிறது என்றும் அதன் மூலம் ஹிந்தியிலும் கீர்த்தி சுரேஷ் என்ட்ரி ஆகவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு மருத்துவர் காந்தராஜன் அளித்த பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "உண்மையில் கீர்த்தி சுரேஷ் பரிதாபத்துக்குரியவர்.

Doctor Kandharajan Talks about Actress Keerthy Suresh Career

பியூட்டி பார்லர்: சினிமாவில் அறிமுகமாகும்போது ரொம்பவே அழகாக இருந்தார். ஆனால் நடிகைகளை அழிப்பதற்கென்றே ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் பியூட்டி பார்லர்தான். அந்த பியூட்டி பார்லர் என்ற விஷயத்துக்குள் கீர்த்தி சுரேஷ் சென்றார். அதன் பிறகு அவரது அழகெல்லாம் போய்விட்டது. கவர்ச்சி போனால் நடிகைகள் காணாமல் போய்விடுவார்கள்.

கீர்த்தி சுரேஷ் அதனால்தான் வந்தவுடன் காணாமல் போய்விட்டார். கீர்த்தி சுரேஷ் போல்தான் ப்ரியா பவானி சங்கரும். ப்ரியா பவானி சங்கர் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரும் காணாமல் போய்விட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X