Shruthi Narayanan: சம்பந்தப்பட்ட சேனலுக்கு தான் கெட்ட பெயர்.. ஆபாச வீடியோ குறித்து காந்தராஜ்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஷ்ருதி நாராயணன். வீடியோ கால் ஒன்றில் பெண் ஒருவர் ஆடை இல்லாமல் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவியது. பலரும் அது ஸ்ருதி நாராயணன் தான் என அவரது பெயருடன் சேர்த்து தகவல்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார்கள். இப்படியான நிலையில் இந்த வீடியோ குறித்து, விளக்கம் அளித்த ஸ்ருதி, அது தான் இல்லை என்றும், அது ஏ.ஐ. ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்படியான நிலையில் இந்த வீடியோ குறித்து மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இணையத்தில் பரவிய வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் சின்னத்திரையில் பலரும் வாய்ப்புக்காக இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்களா எனவும், வாய்ப்புக்காக காத்திருக்கும் பெண்களை இப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்களா எனவும் கேள்விகளை எழுப்புகிறார்கள். மேலும் விஜய் டிவி போன்ற மக்கள் அதிகம் பார்க்கும் சேனலில், ஒரு நடிகைக்கு இவ்வளவு பாலியல் சீண்டல்கள் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

Doctor Kantharaj Interview About Shruthi Narayanan Leaked Video

ஸ்ருதி நாராயணன்: இது மட்டும் இல்லாமல், இந்த வீடியோ குறித்து பேசியபோது சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாராயணன், அந்த வீடியோ உண்மை இல்லை. அது ஏ.ஐ ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ, அந்த வீடியோவின் லிங்கை கேட்பதை விட்டுவிட்டு, அடுத்த வேலையைப் போய்ப் பாருங்கள். உங்கள் அம்மாவுக்கு, தங்கைக்கு, மனைவிக்கும் இருப்பதுதான் அந்த வீடியோவிலும் உள்ளது என பதில் அளித்திருந்தார். அவரது இந்த பதிவு ரசிகர்களை மேலும் அதிர்ச்சியாக்கியது. இவரது இந்த பதிவுக்குப் பின்னர் இந்த விவகாரம் கொஞ்சம் அடங்கியுள்ளது.

காந்தராஜ்: இப்படியான நிலையில் மருத்துவர் காந்தராஜ் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, வாய்ப்புக்காக வரும் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் ஆண்கள் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அது ஏதோ, தொலைக்காட்சிகளில் மட்டுமோ, சினிமாக்களில் மட்டுமோ இல்லை. ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றும் எல்லா இடங்களிலும் ஆண்கள் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள். தொல்லை கொடுத்துக் கொண்டுதான் உள்ளார்கள்.

Doctor Kantharaj Interview About Shruthi Narayanan Leaked Video

கெட்ட பெயர்: பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் குறித்து நேரடியாக புகார் அளிக்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர் 7 முறை கருக்கலைப்பு செய்ய தான் காரணம் என பொதுவெளியில் கூறுகிறார். அதனை அந்த கட்சியில் உள்ள பெண்கள் கைதட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆண்களும் பெண்களும் இணைந்து வேலை பார்க்கும் தளத்தில் இந்த பிரச்னைகள் உள்ளது. பெண்களும் தாங்கள் புகழ் வெளிச்சம் பெற வேண்டும் என்பதற்காக ஆண்களின் காமவெறிக்கு பலியாகி விடுகிறார்கள். இப்போது இது பலரது கவனத்திற்கு வந்துவிட்டது. சம்பந்தப்பட்ட சேனலுக்கு தான் இந்த விவகாரத்தால் கெட்டப் பெயர். இதனால் அந்த சேனலை மக்கள் பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X