சமந்தாவால்தான் குடும்பத்துக்குள் குழப்பம் வந்ததாம்.. அய்யோ மருத்துவர் என்ன இப்படி சொல்றாரு?
சென்னை: நடிகை சமந்தா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். நாக சைதன்யாவை திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்ட அவர்; சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவரும் சமந்தா; வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து மருத்துவர் காந்தராஜ் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சமந்தா டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். நாக சைதன்யாவின் குடும்பம் பெரியது என்பதால் அவர்கள் சமந்தா - நாக சைதன்யாவின் காதலை திருமணம்வரை சென்று சேர்ப்பார்களா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது. ஆனால் நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்கள்.

சமந்தாவுக்கு வந்த பிரச்னை: திருமண முறிவுக்கு பிறகு ஒரு பாடலில் நடனம் ஆடிய சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி படங்களின் ரிசல்ட் அமையவில்லை. முக்கியமாக சாகுந்தலம் படம் பலத்த அடி வாங்கியது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படம் என்ற பெயரையும் அப்படம்தான் பெற்றது.

குட்டி ரெஸ்ட்: சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சமந்தா அறிவித்தார். அறிவித்தது மட்டுமின்றி படங்களுக்காக தான் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையையும் அந்தந்த தயாரிப்பாளர்களிடம் முறைப்படி திருப்பி அளித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். சமந்தாவுக்கு மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டது அதற்கான சிகிச்சைக்காகத்தான் அவர் சினிமாவிலிருந்து குட்டி ரெஸ்ட் எடுத்திருக்கிறார் என்றனர் திரைத்துறையினர்.
ரீ என்ட்ரி: சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயதார்த்தம்: இதற்கிடையே நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். சமீபத்தில்தான் அவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று நாகார்ஜுனா தெரிவித்திருக்கிறார்.

காந்தராஜ் பேட்டி: இந்நிலையில் மருத்துவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நாகார்ஜுனாவின் தந்தை ஏகபத்தினி விரதனாக இருந்தார். ஆனால் நாகார்ஜுனா இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார். நடிகை அமலா நடிகையாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தால் மருமகளாகத்தான் இருந்தார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது பல படங்கள் வெளியாகி குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தான் அவர்களது குடும்பத்துக்குள் குழப்பம் வந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











