வரலட்சுமி திருமணம்.. ராதிகாவின் முன்னாள் கணவர்கள் இதனால்தான் வரலையாம்.. பிரபலம் ஓபனாக சொல்லிட்டாரே

சென்னை: நடிகை ராதிகா கோலிவுட்டில் சீனியர் நடிகைகளில் ஒருவர். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சரத்குமாரை அவர் மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவர் குறித்து மருத்துவரும், திரை விமர்சகருமான டாக்டர் காந்தராஜ் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தவிர்க்கவே முடியாத ஆளுமை எம்.ஆர்.ராதா. பெரியாரின் தீவிர தொண்டரான அவருக்கு பிறந்தவர்தான் ராதிகா. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த அவரை எதேச்சையாக பார்த்த பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். ஆனால் முதலில் படத்தில் நடிப்பதற்கு ராதிகாவுக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் விடாத பாரதிராஜா எப்படியோ ராதிகாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்.

Varalaxmi Radhika Sarathkumar

முன்னணி நடிகை: ராதிகாவின் முதல் படமான கிழக்கே போகும் ரயில் மெகா ஹிட்டடித்தது. முக்கியமாக ராதிகாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல அப்ளாஸ் கிடைத்தது.முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து டாப் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தையும் காண்பிக்க ஆரம்பித்தார்.

திருமணம்: சினிமாவில் பீக்கில் இருந்தபோது அவர் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண உறவு பாதியில் முடிந்தது. இதனையடுத்து நடிகர் விஜயகாந்த்தை அவர் தீவிரமாக காதலித்ததாகவும் ஆனால் அந்தக் காதல் சில காரணங்களால் கைகூடாமல் போனதாகவும் ஒரு பேச்சு உண்டு. அதற்கு பிறகு இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு அவரையும் பிரிந்ததாக கூறப்படும் ராதிகா; இறுதியாக நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

பிஸியான நடிகை: ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைய ஆரம்பிக்க குணசித்திர வேடங்களில் நடித்து ரகளை செய்தார் ராதிகா. ஜீன்ஸ், சூர்யவம்சம் உள்ளிட்ட படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்த அவர்; கடைசியாக மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். சினிமா தவிர்த்து சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என ஏகப்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.'

காந்தராஜ் பேட்டி: வரலட்சுமியின் திருமணத்தில் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாவும், இந்நாள் மனைவி ராதிகாவும் கலந்துகொண்டார்கள். ஆனால் ராதிகாவின் முன்னாள் கணவர்கள் வரவில்லை. ராதிகாவை பொறுத்தவரை அவரது முன்னாள் கணவரான பிரதாப் போத்தன் இறந்துவிட்டார். அதற்கு பிறகு வெள்ளையர் ஒருவரை திருமணம் செய்திருந்தார் அவர். அவரும் இப்போது உயிருடன் இல்லை. சொல்லப்போனால் ராதிகா யாரையும் திருமணத்துக்கு அழைக்கவில்லை. அதனால்தான் அவர்கள் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்வது சினிமாவில் சகஜம். ராதிகாவுக்கு நான்காவது கணவர் சரத்குமார், சரத்குமாருக்கு மூன்றாவது மனைவி ராதிகா" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X