நெறயா சகிலா படம் பார்த்திருக்கேன்.. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாதானே அது நடக்கும்.. பிரபலம் ரொம்ப ஓபன்

சென்னை: மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷயம் ஹேமா கமிட்டி விவகாரம்தான். இதனால் மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் தலைவராக இருந்த மோகன்லால் தனது பதவியை தானாக முன்வந்து கலைத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹேமா கமிட்டி, அளித்த விசாரணை அறிக்கை வெளிவராமல் இருந்தது. இறுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை தற்போது வெளியே வந்து பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பல முன்னணி நடிகர்களின் முகத்திரை கிழிந்துள்ளது எனக் கூறும் அளவிற்கு, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேமா கமிட்டி விவகாரம், தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழிலும் பல முன்னணி நடிகைகள் தொடங்கி, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, பேசி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், அண்மையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களிடம் யாரும் பகிர வேண்டாம் என்பது போன்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

kantharaj shakila hema committee

இப்படியான நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமா உலகம் குறித்து பல்வேறு தகவல்களைக் கூறி வருபவரும், மருத்துவருமான காந்தராஜ் அண்மையில் அளித்த பேட்டியில் பேசியது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அந்தப் பேட்டியில் அவர் பேசிய விஷயங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பேட்டியில் மருத்துவர் காந்தராஜ் பேசியது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

அட்ஜெஸ்ட்மெண்ட்: அந்தப் பேட்டியில், "தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பலரும் பேசி வருகின்றார்கள். அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது, பாலியல் பலாத்காரம் கிடையாது. ஒருவருடன் உடலுறவு கொள்ள மற்றொருவர் ஆசைப்படுகின்றார் என்றால், அது எப்படி நடக்கும், அதற்கு அவரிடம் கேட்டால்தானே நடக்கும். அப்படியானால், அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது, இருவருக்கும் சம்மதத்துடன் நடப்பது. ஒருவர் உங்களிடம் கேட்கும்போது, நீங்கள் நோ சொல்லிவிட்டால், அங்கேயே அந்த விஷயம் முடிந்துவிடும். சினிமா தொழிலில் எந்த அளவிற்கு பெண்கள் இருக்கின்றார்களோ அதே அளவிற்கு மருத்துவத்துறையிலும் உள்ளனர். நானும் பலரிடம்அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கேட்டுள்ளேன். அவர்களும் சம்மதித்தார்கள், எல்லாம் நடந்து முடிந்தது. இதில் தவறு எதுவும் இல்லை.

kantharaj shakila hema committee

சகிலா படம்: சினிமா நடிகைகளுக்கு நடந்ததும் அதேதான். ஆனால் அன்றைக்கு அமைதியாக இருந்துவிட்டு, இன்றைக்கு, என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் எனக் கூறுவது எந்த அளவிற்கு சரி எனத் தெரியவில்லை. நான் நிறைய சகிலா படம் பார்த்திருக்கின்றேன். சகிலா நடித்த படங்கள் எல்லாம் மன்மதனுக்கான பக்திப் படங்கள். எனது ஆசிரியர்கள் தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என தலைக்கு முண்டாசு கட்டிக்கொண்டு வந்து பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் எல்லாம் முதல் வரிசையில் அமர்ந்து சகிலா படம் பார்ப்போம்.

kantharaj shakila hema committee

யாருடனெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவைப் பொறுத்தவரையில் கேமரா மேன், கதாநாயகன், எடிட்டர், இயக்குநர் என பலரிடம் ஒரு நடிகை அட்ஜெஸ்ட் செய்து போகவேண்டிய சூழலை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கிவிட்டார்கள். கேமராமேனிடம் அட்ஜெஸ்ட் செய்து போகவில்லை என்றால், உங்களை வேறு கோணத்தில் காட்டிவிடுவார். எடிட்டரிடம் அட்ஜெஸ்ட் செய்யவில்லை என்றால், நீங்கள் இருக்கும் காட்சிகளை அவர் வெட்டிவிடுவார், இயக்குநர் மற்றும் கதாநாயகனிடம் ஒத்துழைக்கவில்லை என்றால் அடுத்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது" என பொருள்படும்படி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X