என்ன கிக் இருக்கு?.. வரலட்சுமி - நிக்கோலாய் திருமணத்தை விமர்சித்த மருத்துவர்.. இதெல்லாம் ஓவர் பாஸ்
சென்னை: வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க வரலட்சுமி - நிக்கோலாயின் திருமணம் தாய்லாந்தில் நடந்ததை மருத்துவர் காந்தராஜ் விமர்சித்திருக்கிறார்.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்தார். மும்பையில் நிக்கோலாய் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். பெரும் கோடீஸ்வரரான அவருக்கு மும்பையில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவருடனுமே நல்ல பழக்கம் இருக்கிறது. அவரது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ட் கேலரியை நிக்கோலாய் திறம்பட கையாண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி விவாகரத்து: நிக்கோலாய் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க வரலட்சுமியின் காதல் குறித்து சரத்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து க்ரீன் சிக்னல் கொடுத்தனர். அதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
திருமணம்: தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி இவர்களது திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. அதில் இரு வீட்டாரும், உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். திருமணத்தை தாய்லாந்தில் முடித்துவிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அந்த ரிசப்ஷனுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டாகின.
ஹனிமூன்: திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கும் சென்றிருந்தனர். இதற்கிடையே இவர்களது திருமண செலவு மட்டும் 850 கோடி ரூபாய் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்த சரத்குமார், "எனது மகள் திருமணத்துக்கு 800 கோடி ரூபாய்வரை செலவு ஆகியிருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அந்த செய்தி முற்றிலும் தவறானது" என்று கூறியிருந்தார். மேலும் வரலட்சுமியோடு செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய நிக்கோலாய், எனது பெயரோடு நான் வரலட்சுமியின் பெயரை சேர்த்துக்கொள்வேன் என்று சொல்லியிருந்தார்.

காந்தராஜ் பேட்டி: இந்நிலையில் மருத்துவரும், திரை விமர்சகருமான காந்தராஜ் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் நடந்ததை வைத்து விமர்சித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சினிமாவில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் இப்போது விளம்பரம் தேடுகிறார்கள். ஏன் இங்கெல்லாம் கல்யாண மண்டபமே இல்லையா. தண்டையார் பேட்டையில் நடக்க வேண்டிய கல்யாணத்தை ஏன் தாய்லாந்தில் வைக்கிறார்கள்.
எல்லாம் விளம்பரம்: எல்லாம் விளம்பரம்தான். அப்போதுதான் அவர்களை பற்றி தொடர்ந்து பேசுவார்கள். இல்லையென்றால் கல்யாணத்தில் என்ன கிக் இருக்கிறது. சினிமா போய்விட்டது என்பதுதான் உண்மை. பெண் ரசிகைகள் எல்லாம் சீரியலுக்கு போய்விட்டார்கள். இளைஞர்கள் எல்லாம் ஓடிடியில் வெப் சீரிஸுக்கு சென்றுவிட்டார்கள்" என்றார். காந்தராஜின் இந்தப் பேட்டியை பார்த்த பலரும்; இதெல்லாம் ஓவர் பாஸ்.. அவர்கள் இஷ்டம் அவர்கள் எங்கோ திருமணத்தை வைத்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு என்ன என்று காட்டமாக கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











