கமல் ஹாசன் பற்றி நெகட்டிவ் இமேஜ்.. பரப்பியது சூப்பர் ஸ்டார்தானாம்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய காந்தராஜ்

சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. ஷங்கர் இயக்கியிருந்த அந்தப் படம் படுதோல்வியை மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. அடுத்ததாக அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் கமல் ஹாசன் குறித்து டாக்டர் காந்தராஜ் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்ற கமல் ஹாசன் மீண்டும் விக்ரம் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. ஏற்கனவே கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டானதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரிடமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார்.

kamal haasan amitabh bachchan kantharaj

அட்டர் ஃப்ளாப்: ஆனால் எழுந்திருந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை. மேக்கிங், இசை என எதிலுமே தேறாத இந்தியன் 2 படுதோல்வியடைந்தது. படுதோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. இதற்கிடையே அவர் வில்லனாக நடித்த கல்கி படமும் காலை வாரியது. அந்தப் படமும் ட்ரோலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக கெட் அப் சேஞ்சுக்கு பெயர் போன கமல் ஹாசன்; அந்தப் படத்தில் கெட்டப்புக்காகவும் கிண்டல் செய்யப்பட்டார்.

தக் லைஃப்: இப்படி வரிசையாக பலத்த அடி வாங்கியிருக்கும் கமல் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். இதில் கமலுடன் திரிஷா, சிம்பு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படமானது அடுத்த வருடம் ஜூன் 6ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அறிவிப்பும் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஏழாம் தேதி வெளியானது. கண்டிப்பாக இந்தப் படத்தை வைத்து இதற்கு முன் சந்தித்த தோல்விக்கு மருந்திட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்கிறார் கமல்.

காந்தராஜ் பேட்டி: இந்தப் படத்தை முடித்த கையோடு அவர் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தச் சூழலில் கமல் ஹாசன் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த டாக்டர் காந்தராஜ், "ஹிந்தியில் கமல் ஹாசனை ஓரங்கட்டினார்கள். அமிதாப் பச்சன் அங்கே கமலை வளரவிடாமல் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் யோசிக்காமல் செய்தார். சென்னையில் ஒரு ஹிந்தி படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

kamal haasan amitabh bachchan kantharaj

கமல் செகண்ட் ஹீரோ: அந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மெயின் ஹீரோ. ஸ்ரீதேவி ஹீரோயின். கமல் ஹாசன் செகண்ட் ஹீரோ. எதார்த்தமாக நான் கமலை பார்ப்பதற்காக அந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்த ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு ஸ்ரீதேவியும் இருந்தார். என்ன படம் என்று நான் கமலிடம் கேட்டதற்கு; அமிதாப் ஹீரோ. நான் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறேன் என்று கூறினார். பேசிக்கொண்டிருந்தபோதே இந்தப் படம் ரிலீஸாகும் என்றெல்லாம் எனக்கு தோன்றவில்லை என்று கமலிடம் கூறினேன்.

சொன்ன மாதிரியே நடந்தது: நான் சொன்னதுபோலவே அந்தப் படம் ரிலீஸாகவில்லை. கமல் ஹாசனை வைத்து படம் எடுத்தால் அந்தப் படம் ட்ராப் ஆகும். அவர் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவர் என்கிற நெகட்டிவ் இமேஜை அவர் மீது உருவாக்கினார்கள். அடுத்ததாக அந்தா கானுன் படத்தில் ரஜினியை நடிக்க வைத்து அவரை தூக்கிவிட பார்த்தார்கள். ஆனால் ரஜினி ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்துவிட்டார். அப்போதைய சூழலில் அமிதாப்புக்கு சினிமா பின்னணி மற்றும் அரசியல் பின்னணி இருந்தது. அதனால் அவரை எதுவும் செய்ய முடியாது" என்றார். முன்னதாக காந்தராஜ் நடிகைகளை பற்றி அவதூறாக பேசினார் என்று கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் மீது இப்படி ஒரு விமர்சனத்தை காந்தராஜ் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X