ஒரே காரில் கமலும் சிம்ரனும்?.. அப்புறம்தான் கௌதமி?.. கண்டபடியெல்லாம் சொன்ன பிரபலம்

சென்னை: கமல் ஹாசன் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் வேகமெடுத்துள்ளன. பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் சினிமாவில் பிஸியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் குறித்து டாக்டர் காந்தராஜ் பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் ஹாசன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். 50 வருடங்களுக்கு மேலாக கேமரா முன்பு தோன்றிவரும் கமல் ஹாசன் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது, தயாரிப்பு என பல ஜானரில் தனது தனித்துவ அடையாளத்தை பதித்தவர். அதனாலேயே அவரை பலரும் ஃபாலோ செய்துவருகிறார்கள். அவரது நடிப்பில் கடைசியாக விக்ரம் படம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

Doctor Kantharaj Talks about Kamal Haasan Simran Relationship

அடுத்தடுத்த படங்கள்: விக்ரம் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த கமல் ஹாசன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். அந்தவகையில் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் தூசு தட்டப்பட்டு மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. உள்நாடு, வெளிநாடு என பறந்து பறந்து நடித்தார் கமல். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமடைந்திருக்கின்றன. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி: மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நடிப்பு தவிர்த்து தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் சிம்புவின் எஸ்டிஆர் 48, சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் ஆகிய படங்களையும் தயாரித்துவருகிறார். இவை தவிர்த்து வேறு சில படங்களையும் தயாரிக்கும் முடிவில் கமல் ஹாசன் இருப்பதாக திரைத்துறையில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

Doctor Kantharaj Talks about Kamal Haasan Simran Relationship

சர்ச்சை: கமல் ஹாசன் பார்க்காத புகழ் இல்லை. வைரமுத்து தசாவதாரம் படத்தில் 'ஆஸ்கர் உனக்கு தூரமில்லை' என்று எழுதியதற்கு ஏற்ப வெறித்தனமாக உழைத்து புகழின் உச்சிக்கு சென்றவர். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ்ச்சியை பெற்றாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தவர் கமல். முக்கியமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இப்போதும் விமர்சிப்பவர்கள் ஏராளம் உண்டு. ஸ்ரீவித்யா, வாணி கணபதி, சரிகா, கௌதமி என அவரது வாழ்க்கையில் வந்து சென்ற பெண்கள் அதிகம். ஆனால் அவை எதையுமே பொதுவெளியில் மறைத்தது இல்லை கமல் ஹாசன்.

சிம்ரன்: இந்த லிஸ்ட்டில் அவ்வப்போது சிம்ரனின் பெயரும் அடிபடுவது உண்டு. அதாவது கமலும் சிம்ரனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். சிம்ரனின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கமல் ஹாசன் அடிக்கடி போவதுண்டு என்று பேச்சுக்கள் ஓடும். ஆனால் அதுகுறித்து இரண்டு பேருமே மௌனம் சாதித்தார்கள். இந்நிலையில் டாக்டர் காந்தராஜ் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல் ஹாசன் - சிம்ரன் உறவு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

காந்தராஜ் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கமல் ஹாசன் எப்போதும் ஊருக்கு உபதேசம் செய்ததே இல்லை. அவர் பல பெண்களுடன் இருந்தவர். ஆனால் அதனை அவர் எப்போதும் மறைத்ததே இல்லை. இது என்னுடைய வாழ்க்கை ஸ்டைல் என்று காண்பித்தவர். நெய்வேலியில் நடிகர்கள் போராட்டம் நடத்தியபோது ஒரே காரில் கமல் ஹாசனும், சிம்ரனும் வந்து இறங்கினார்கள். அதன் மூலம் நான் இப்போது சிம்ரனை நேசித்துக்கொண்டிருக்கிறேன். அவரும் என்னை நேசிக்கிறார் என்று உணர்த்தினார். சிம்ரனுக்கு பிறகுதான் கௌதமி அவரது வாழ்க்கையில் வந்தார். கௌதமியை பிரிந்த பிறகு பெண்கள் விஷயத்தில் கமல் கவனம் செலுத்துவதில்லை" என்றார். அவரது இந்தப் பேட்டி திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X