நாகேஷ்வர ராவ் ஏகபத்தினி விரதன்.. இவங்க வாரிசுகளா இப்படி? நாகார்ஜூனாவை விளாசிய பிரபலம்!
சென்னை: தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. 2009 ஆம் ஆண்டு 'ஜோஷ்' திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் இவர் சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் நிச்சயம் 8ந் தேதி நடைபெற்றது. இதுகுறித்து சினிமா விமர்சகரான டாக்டர் காந்தராஜ் வீடியோவில் பேசி உள்ளார்.
அதில், தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்தவர் தான் நாகேஷ்வர ராவ், அவரின் மகன் தான் நாகார்ஜூனா அவரும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக இருக்கிறார். இவரின் மகன் தான் நாக சைத்தன்யா இவரும் நடிகராக இருக்கிறார். நாகேஷ்வர ராவ், ஏகபத்தினி விரதனாக இருந்தார். இவர் யாரையும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, அவர் சாகுற வரைக்கும் ஒரே மனைவியோடத்தான் இருந்தார்.

தீவிர நார்த்திகர்: இது மட்டுமில்லாமல், நாகேஷ்வர ராவ் தீவிரமான நார்த்திகர், மனைவி ரொம்ப வற்புறுத்தியதால் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அவர் நார்த்திகராக முக்கிய காரணம், முதன் முதலில் அவர் படத்தில் நடித்த போது, பவர் கட்டாகிவிட்டது. இதனால், இது பீடை புடிச்ச மூஞ்சி என்று பலரும் விமர்சித்தனர். ஆனால், அதை எல்லாம் கடந்து படத்தில் நடித்து, இந்திய சினிமாவில் அதிக ஆண்டுகள் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர் என்ற பெருமை பெற்ற ஒரே நடிகர் அவர் தான். இதனால் தான் அவருக்கு கடவுள் மீது நம்பிக்கையே இல்லை என்றார்.
கட்டுப்பாடான குடும்பம்: அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த நாகார்ஜூனா முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக அமலாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது நாகார்ஜூனாவின் மகன் சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு நடிகையை நிச்சயம் செய்து இருக்கிறார். இவர்கள் குடும்பம் சினிமா குடும்பமாக இருந்தாலும், குடும்ப வாழ்க்கைக்கு வந்துவிட்டால், சினிமாவில் நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
குடும்பத்தில் புயல்: ஆனால், நாகசைத்தன்யாக சமந்தாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் நடித்துகொண்டுதான் இருந்தார். அதன் பிறகு தான், சமந்தாவின் விவகாரமான போட்டோக்கள் எல்லாம் வெளியாகி குடும்பத்தில் பெரும் புயலை கிளப்பியது. ஒன்று மனைவியாக இரு இல்லை நடிகையாக இரு என்று சொல்லிவிட்டுத்தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இப்போது நாகசைத்தன்யா மீண்டும் ஒரு நடிகையை திருமணம் செய்ய இருக்கிறார் என்று டாக்டர் காந்தராஜ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











