ஸ்வீட்டியா.. சிவகார்த்திகேயனை கொஞ்சும் டாக்டர் பட இயக்குநர்.. என்ன மேட்டர்னு பாருங்க!

சென்னை: டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை ஸ்வீட்டி என கொஞ்சிய டிவிட் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது டாக்டர், அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் டாக்டர் படத்தை இயக்கி உள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்கள்

முக்கிய கதாபாத்திரங்கள்

தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசை

அனிருத் இசை

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

டப்பிங் பணிகள் நிறைவு

டப்பிங் பணிகள் நிறைவு

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

மேலும் இப்படி ஒரு பொழுதுபோக்கான பயணத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் படக்குழுவுக்கு நன்றி கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேங்க் யூ ஸ்வீட்டி

தேங்க் யூ ஸ்வீட்டி

இதனிடையே சிவகார்த்திகேயனின் இந்த டிவிட்டுக்கு பதில் அளித்துள்ள நெல்சன் திலீப்குமார், தேங்க் யூ ஸ்வீட்டி என்று சிவகார்த்திகேயனின் பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும் எங்களுக்கு மிகவும் இனிமையாக இருப்பதற்கும், இதை ஒரு மறக்கமுடியாத மற்றும் ஒரு பொழுதுபோக்கு பயணமாக மாற்றியதற்கும் நன்றி என்று கூறியுள்ளார். மேலும் டாக்டர் விரைவில் உங்களை தியேட்டரில் சந்திக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை ஸ்வீட்டி என்று கொஞ்சியிருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் நெல்சன் திலீப்குமார், டாக்டர் படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருப்பதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X