டாக்டர் படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு... ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை உலகெங்கிலும் டாக்டர் படம் ரிலீசாக உள்ளது.
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது,
இந்நிலையில் நாளை ரிலீசாக உள்ள டாக்டர் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்டர், இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். உடல் உறுப்புகளை திருடி விற்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் பல மாதங்களுக்கு தள்ளிப் போனது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
இதனிடையே படத்தின் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் பிரமோ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மிகுந்த இடைவெளியை எடுத்துக் கொண்டு இந்தப் படம் நாளை உலகெங்கிலும் ரிலீசாக உள்ளது.

சாட்டிலைட் உரிமையை பெற்ற சன் டிவி
பிரியங்கா அருள் மோகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் யோகிபாபு காமெடி போர்ஷனை கவனித்துக் கொண்டுள்ளார். நடிகர் வினய் வில்லனாக மிரட்டியுள்ளார். படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் தொலைக்காட்சி 25 கோடிகளுக்கு கைப்பற்றியுள்ளது.

நாளை படம் ரிலீஸ்
இந்நிலையில் நாளை படம் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலமாவு கோகிலா வெற்றிப் படத்தை கொடுத்த நெல்சனின் இரண்டாவது படம் இது என்பதால் எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. நாளைய தினம் திரையரங்குகளில் படம்வெளியாகவுள்ளது.

மிரட்டும் அனிருத் இசை
அனிருத் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது, குறிப்பாக டிக் டாக் மற்றும் செல்லம்மா பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு அதுவும் சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்,

ஒரு நாளில் ரிலீஸ்
படக்குழுவினரும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பிரமோ வீடியோக்களை தினந்தோறும் வெளியிட்டு வருகின்றனர். இதுவும் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இன்னும் ஒரு நாளே ரிலீசுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
இதன் மூலம் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். சிலர் நாளை வரை படத்தை பார்ப்பவதற்கு காத்திருக்க முடியவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனை திரையில் காண காத்திருக்கும் அவரது ரசிகர்களின் காத்திருப்புக்கு படம் சரியான தீனி போடும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











