"டாக்டர்"விஜய்க்காக சிறப்பு காட்சி..படக்குழு ஏற்பாடு!
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை பிரியா மோகன் இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
டாக்டர் படத்தை கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு இப்பொழுது அதற்கு முன்பாகவே விஜய்க்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டூயட் பாடலும்
காமெடியனாக பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் யோகிபாபு கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்ததோடு நயன்தாராவுடன் ஒரு டூயட் பாடலுக்கும் ஆடியிருப்பார். அந்த பாடல் மாபெரும் வெற்றி பெற்றதோடு யூடியூபில் லட்சம் பார்வையாளர்களை கொண்டு ட்ரெண்டிங்கில் இருந்தது.

டப்பிங் வேலைகளும் முடிந்து
இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்க இப்பொழுது, கோலமாவு கோகிலா ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது இதனை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கிவருகிறார் ஜான்வி கபூர் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நீண்ட நாள் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயனுடன் இணைந்து நெல்சன் பணியாற்றிவரும் டாக்டர் திரைப்படம் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து டப்பிங் வேலைகளும் முடிந்து ப்ரீ புரடக்சன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் 65
டாக்டர் படத்தை முடித்த கையோடு நெல்சன் இப்பொழுது விஜய்யின் 65வது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்க அதை பற்றிய அதிகாரப்பூர்வ
அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது

சென்சாருக்கு போக
இந்த நிலையில் டாக்டர் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுற்று படம் தயாராகி சென்சாருக்கு போக உள்ள நிலையில், விஜய்காக சிறப்பு காட்சி ஒன்றையும் சிவகார்த்திகேயன் நெல்சன் தயார் செய்துள்ளனர். சென்னையில் உள்ள பிரபல ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் படத்தை போட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளனர். தன்னுடைய படத்தை இயக்கும் இயக்குனரின் முந்தைய படத்தை காண விஜய்யும் ஆவலுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











